‘சகஜம்’ கூட்டூமம் (pantomime) நாடக ஆற்றுகை

யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் கடந்த 26.06.2016 ‘சகஜம்’ எனும் கூட்டூம நாடக ஆற்றுகை ஒன்றினை நிகழ்த்தியிருந்தனர். இன் நாடக நடிகர்களாக. இ.வினோதன், த.கில்மன், இ.மகிந்தன், ம.சுலக்சன். கயன், லி.அனன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். ஒளி விதானிப்பு, நெறியாள்கையினை தி.தர்மலிங்கம் மேற்கொண்டிருந்தார். ஒளி இயக்க உதவியினை ம.சுலக்சன் இ.மகிந்தன் ஆகியோர் மேற்கொண்டனர்.

ஆற்றுகையின் பின்னரான கலந்துரையாடலில் கலந்து கொண்டோர் “இந்த நாடக ஆற்றுகை நடிகர்களுக்கும் பார்ப்போருக்கும் புதிய அனுபவ வெளியினை ஏற்படுத்தியதாகவும் வார்த்தைகள் இல்லாது உடல் மொழி மூலமாக அனைத்து நடிகர்களும் தொடர்பாடிக் கொண்டமை புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அமைந்ததாகவும் அது சாதாரன மாக நாம் பார்க்கின்ற வசன நாடகங்களை விடவும் சற்று கடுமையான பயிற்சியின் முக்கியத்தையும் உணர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தனர். மேலும் யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் இத்தகைய வித்தியாசமான ஆற்றுகைகள் அரங்கக் கலையினைக் கற்கும் மாணவர்கள் மற்றும் அரங்கத் துறை சார்ந்தவர்கள் பங்கேற்று பயன் பெறக்கூடிய வகையில் அமைந்துள்ளாதாகவும் தெரிவித்தனர்.

ஒளிப்படங்கள்: ஆ.ஸ்ரீகந்த்

சகஜம் கூட்டூமம் (pantomime) நாடக ஆற்றுகை (1) சகஜம் கூட்டூமம் (pantomime) நாடக ஆற்றுகை (2) சகஜம் கூட்டூமம் (pantomime) நாடக ஆற்றுகை (3) சகஜம் கூட்டூமம் (pantomime) நாடக ஆற்றுகை (4)

Related posts

*

*

Top