மன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது

– சிவஸ்ரீ மகா தர்மகுமார சர்மா

மன்னார் மாவட்ட சைவக் கலை இலக்கியமன்றம் நடத்திய கம்பன் விழாவில் தமிழருவி த.சிவகுமாரனுக்கு மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் பொன்னாடை போர்த்து, நானாட்டான் பிரதேசச் செயலாளர் எம்.பரமதாசன் மாலைசூட்ட ‘கம்பன் புகழ் விருதினை’ தென் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் க.இரகுபரனும் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி.செ.வனஜாவும் வழங்கி கெளரவித்தனர்.

தொடர்ந்து. இடம்பெற்ற சிறப்புப் பட்டி மண்டபத்தில் சோ.றோகன்ராஜ், மகா தர்மகுமார சர்மா, ச.றமேஸ், பா.சதீஸ், எஸ்.சதீஸ், ஆ.பாலசிங்கம் ஆகியோர் உரையாற்ற தமிழருவி த.சிவகுமாரன் நடுவராகக் கடமையாற்றினார்.

– சிவஸ்ரீ மகா தர்மகுமார சர்மா,
( தலைவர், மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றம்)

1 2

Related posts

*

*

Top