திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் ஆலயத்தில் சமய அறிவுப் போட்டிப் பரிசளிப்பு விழா

திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவில் வருடாந்த பெருந்திருவிழாவையொட்டி நடாத்தப்பட்ட சமய அறிவுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா கடந்த சனிக்கிழமை 26.06.2016 தீர்த்தத் திருவிழாவின்  போது நடைபெற்றது.

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேகன் தலைமையில் நடைபெற்ற இப்பரிசளிப்பு நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர்பயிற்சி கல்லூரியின் பிரதிஅதிபர் ச.லலீசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிபகபீடப் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி, ஆனைப்பந்தி மெதடிஸ்ற் மிஷன் வித்தியாலய அதிபர் யோ.ஜெகஆனந்தம் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றுப் பரிசுகளை வழங்கினர்.

சிறப்புப் பரிசாக போட்டியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட டிசாந்தன் யசோதரன்,  தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.  அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தனது தந்தை அமரர் சி. பொன்னுத்துரையின் நினைவாக தங்க்பதக்கப் பரிசினை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலங்காவல் பிள்ளையார் ஆலயத்தில் சமய அறிவுப் போட்டி (1) தலங்காவல் பிள்ளையார் ஆலயத்தில் சமய அறிவுப் போட்டி (2) தலங்காவல் பிள்ளையார் ஆலயத்தில் சமய அறிவுப் போட்டி (3)

Related posts

*

*

Top