சம்சுங்கின் புதிய நோட் (Note) திறன்பேசி வெளியிடும் நிகழ்வு

Samsung Unpacked 2016 நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை சம்சுங் அனுப்பியுள்ளது. இந்த நிகழ்வின்போது, தனது புதிய Note வகையிலான திறன்பேசியை சம்சுங் வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த நிகழ்வானது, எதிர்வரும் 02.08.2016 காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன், சம்சுங்கின் இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது. அழைப்பிதழில் காணப்படுகின்ற தகவல்களின்படி, வெளியிடப்பட உள்ள சாதனமானது Note 7 என அழைக்கப்படும் எனத் தெரிகின்றது. எவ்வாறெனினும் Note 6 என்ற சாதனம் ஒருபோதும் இருந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சம்சுங் சாதனங்கள் தொடர்பான தகவல்களை கசிய விடும் இணையப் பிரபலமான Evan Blass வெளியிட்ட படங்களின்படி, இச்சாதனமானது முனைகளைக் கொண்ட வளைந்த திரையயைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இச்சாதனத்தின் வன்பொருள் மற்றும் மென்பொருள் பற்றிய தகவல்கள் விவாதக்குரிய ஒன்றாக உள்ளது. குறிப்பாக USB Type-C portஐ கொண்டிருக்குமா மற்றும் இற்றைப்படுத்தப்பட்ட Snapdragon 821 chipsetஐ கொண்டிருக்குமா என்பது பற்றி சாம்சுங் அறிவிக்கவில்லை
.

Related posts

*

*

Top