நல்லூர் ஸ்ரீ பால கதிர்காம ஆடிவேல் வீதியுலா நிறைவு

யாழ்ப்பாணம், நல்லூர் ஸ்ரீ பால கதிர்காம ஆலய ஆடிவேல் வீதியுலா நேற்று 24.07.2016 ஞாயிற்றுக்கிழமை தமிழ்மக்களின் கலை கலாச்சார நடனங்களுடன் வெகு விமரிசையாக இடம்பெற்றது.

ஆடிவேல் வீதியுலாவின் மூன்றாம் நாளான  நேற்று கதிர்காமப் பெருமான் விசேட ஊர்தி அலங்காரங்களுடன் இந்துப் பாரம்பரிய கலை கலாசார தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் நிகழ்வாக கரகாட்டம், குதிரையாட்டம், மயிலாட்டம், தீப்பந்த விளையாட்டுக்கள் இன்னும் பல நிகழ்வுகளுடன் மின்சார அலங்காரங்களுடன் பாலகதிர்காமத்தை நோக்கி வந்தடைந்தார்.

வீதியனைத்தும் வாழை தோரணங்கள் பூரணகும்பம் வைத்து ஆயிரக்கணக்கான மக்கள் திரளாகப் புடைசூழ ஆலயத்தை வந்தடைந்தார். அதன் பின்பு பாலமுருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று ஆடிவேல் ரதபவனி இரவு 8 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.

ஒளிப்படங்கள்: ஐங்கரன் சிவசாந்தன்

நல்லூர் ஸ்ரீ பால கதிர்காம ஆடிவேல் வீதியுலா நிறைவு (1) நல்லூர் ஸ்ரீ பால கதிர்காம ஆடிவேல் வீதியுலா நிறைவு (2) நல்லூர் ஸ்ரீ பால கதிர்காம ஆடிவேல் வீதியுலா நிறைவு (3) நல்லூர் ஸ்ரீ பால கதிர்காம ஆடிவேல் வீதியுலா நிறைவு (4) நல்லூர் ஸ்ரீ பால கதிர்காம ஆடிவேல் வீதியுலா நிறைவு (5)

Related posts

*

*

Top