வண்ணக் கோலங்கள் கலைநிகழ்வு

Barack Obama

திருமறைக் கலாமன்றமும் சுனேரா நிறுவனமும் இணைந்து மாற்று ஆற்றல் உடைய பிள்ளைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்துள்ள ‘வண்ணக் கோலங்கள்’ என்னும் கலை நிகழ்வு நாளை 29.07.2016 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது கலையகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனனும் சிறப்பு விருந்தினராக யாழ். மாகாணத் தலைவி அருட்சகோதரி கிறிஸ்ரா மரியதாஸூம் சிறப்பிக்க வுள்ளார்கள். கலைநிகழ்வுகளாக உடுவில் ஆர்க் மாற்று ஆற்றல் உடைய பிள்ளைகள் வழங்கும் நடனங்கள், பாடல்கள், நாடகங்கள் என்பன இடம்பெறவுள்ளன.

Related posts

*

*

Top