‘பொன்னகம் மீட்போம்’ கவிதை நூல் வெளியீடு

மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் பௌர்ணமி தின கலை நிகழ்வின் இருபத்தோராவது தொடர் நிகழ்வாக மகுடம் பதிப்பகத்தின் பதினோராவது வெளியீடான கவிஞர் தாமரைத் தீவானின் ‘பொன்னகம் மீட்போம்’ என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா கடந்த 28.07.2016 வியாழக்கிழமை மாலை நான்கு மணிக்கு மட் / மாநகர சபையின் நகர மண்டபத்தில் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் நடை பெற்றது.

மகுடம் கலை இலக்கிய வட்ட தலைவர் கவிஞர் வி.மைக்கல் கொலின் வரவேற்புரை நிகழ்த்த நூல் தொடர்பான நயவுரையை முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் கலாபூசணம் எஸ்.எதிர்மன்னசிங்கம் அவர்களும் ‘ ஈழத்து இலக்கியத்தில் தாமரைத் தீவானின் தடங்கள் ‘ என்ற தலைப்பில் பேராசிரியர் செ.யோகராசா அவர்களும் சிறப்புரை ஆற்றினர்.

நிகழ்வின் முதன்மை அதிதியாக மட்/ மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி. பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்கள் கலந்து கொண்டு.

என்பத்தைந்தாவது அகவையை பூர்த்தி செய்யும் ஈழத்தின் மூத்த கவிஞர் தாமரைத் தீவானை சிறப்பிக்கும் முகமாக வெளியிடப்பட்ட இந் நூலின் முதல் பிரதியை மட்/மாவட்ட தமிழ்ச் சங்க பொருளாளரும், கிழக்கு மாகாண நிர்மாணிப்பு தொழில்கள் கூட்டமைப்பின் தலைவருமான வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களுக்கு வழங்கி வைத்தார். நன்றியுரையையும் ஏற்புரையையும் கவிஞர் தாமரைத் தீவான் நிகழ்த்தினார்.

நிகழ்வினை ஜீ.எழில் வண்ணன் தொகுத்து வழங்கிய இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்குமாகாண சபை, தவிசாளர், உறுப்பினர்கள், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள்உட்பட அரசாங்க அதிகாரிகள், கலை இலக்கிய நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பொன்னகம் மீட்போம் கவிதை நூல் வெளியீடு (1) பொன்னகம் மீட்போம் கவிதை நூல் வெளியீடு (2) பொன்னகம் மீட்போம் கவிதை நூல் வெளியீடு (3) பொன்னகம் மீட்போம் கவிதை நூல் வெளியீடு (4) பொன்னகம் மீட்போம் கவிதை நூல் வெளியீடு (5) பொன்னகம் மீட்போம் கவிதை நூல் வெளியீடு (6) பொன்னகம் மீட்போம் கவிதை நூல் வெளியீடு (7) பொன்னகம் மீட்போம் கவிதை நூல் வெளியீடு (8)

Related posts

*

*

Top