“இலங்கை அரசியல் யாப்பு” நூல் வெளியீடு

அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கை அரசியல் யாப்பு – டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்பு (1993 – 2016) வரையான நூல் வெளியீடநேற்று  07.08.2016 சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தனின் ஏற்பாட்டில், வவுனியா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தமிழருவி சிவகுமாரன் தலைமையில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய கலாச்சார மண்டபத்தில் இவ் வெளியீடு இடம்பெற்றது.

இதில் தமிழருவி சிவகுமாரன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் எழுத்தாளர் மேழிக்குமரன், புளொட் – ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், அரசியல் ஆய்வாளர்களாகிய நிலாந்தன், ஜோதிலிங்கம் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உபதலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மேலும் இந்த நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர்களாகிய தியாகராஜா, இந்திரராஜா, ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீடு alt= alt= alt=

Related posts

*

*

Top