நல்லூர்க் கந்தசுவாமி வருடாந்தப் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Barack Obama

- எஸ்.ரவி

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இன்று 08.08.2016  திங்கட்கிழமை முற்பகல்  10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

விநாயகப் பெருமானுக்கும், வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமானுக்கும் விஷேட அபிஷேக பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் சிறப்புப் பூசைகள் இடம்பெற்று அங்கிருந்து மேள தாள வாத்தியங்களுடன், குடை, கொடி, ஆலவட்டம் புடை சூழ எம்பெருமான் வள்ளி, தெய்வயானை சமேதரராக எழுந்தருளிக் கொடித் தம்பத்தை வந்தடைந்தார்.

சுபநேரமான காலை 10 மணியளவில் வேதியர்கள் வேதம் ஓத, தவில், நாதஸ்வர முழக்கங்களுடன் கொடியேற்ற வைபவம் சிறப்பாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் புடை சூழ எம்பெருமான், விநாயகர், வள்ளி தெய்வயானை சமேதரராக உள்வீதி வலம் வந்து அருள்பாலித்தார். கொடியேற்ற உற்சவம் காண யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும், புலம்பெயர் நாடுகளிருந்தும் ஆயிரக்கணக்கான அடியவர்கள் ஆலயத்தில் கூடியிருந்தனர்.

இன்று ஆரம்பிக்கப்பட்ட மஹோற்சவப் பெருவிழா தொடர்ந்து 25 தினங்கள் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 17.08.2016 ஆம் திகதி மாலை மஞ்சத் திருவிழாவும், 24.08.2016 ஆம்திகதி திருக்கார்த்திகைத் திருவிழாவும், 27.08.2016 ஆம் திகதி கைலாச வாகனத் திருவிழாவும், 27.08.2016 ஆம் திகதி கஐவல்லி மஹாவல்லி உற்சவமும், 28.08.2016 ஆம் திகதி ஒருமுகத்திருவிழாவும், 31.08.2016 ஆம் திகதி புதன்கிழமை காலை 07 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் 01 ஆம் திகதி காலை 7 மணிக்குத் தீர்த்த உற்சவம் இடம்பெற்று அன்றைய தினம் மாலை கொடியிறக்க வைபவத்துடன் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இனிதே நிறைவடையும்.

இதேவேளை, நல்லூரான் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு நல்லூர் புனித பிரதேசம் விழாக் கோலம் பூண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒளிப்படங்கள் : எஸ்.ரவி

நல்லூர்க் கந்தசுவாமி வருடாந்தப் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் (1) நல்லூர்க் கந்தசுவாமி வருடாந்தப் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் (2) நல்லூர்க் கந்தசுவாமி வருடாந்தப் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் (3) நல்லூர்க் கந்தசுவாமி வருடாந்தப் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் (4) நல்லூர்க் கந்தசுவாமி வருடாந்தப் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் (5)

Related posts

*

*

Top