அரசகேசரிப் பிள்ளையார் கோவிலில் சுந்தரர் குருபூசை விழா

நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவில் முன்னெடுக்கும் சுந்தரர் குருபூசை விழா நாளை 10.08.2016 புதன்கிழமை மாலை 7 மணிக்கு ஆலய மண்டபத்தில் ஓய்வுநிலை அதிபர் இ.குணநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஆசியுரையை வண. நீர்வைமணி கு. தியாகராஜக் குருக்களும் தொடக்கவுரையை நிகழ்வின் ஏற்பாட்டாளரான ஆலயப் பிரதம குரு வண. சோமதேவக் குருக்களும் அருளுரைகளை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளும் யாழ். சின்மயாமிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரி ஜாக்கிரத் சைதன்யாவும் சிறப்புரைகளை கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன், வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் சைவப் புலவர் கந்த சத்தியதாசன் ஆகியோரும் ஆற்றவுள்ளனர்.

Related posts

*

*

Top