நல்லூர் நாடகத் திருவிழா 2016

செயல் திறன் அரங்க இயக்கத்தினரால் வருடா வருடம் நடாத்தப்படும் நல்லூர் நாடகத்திருவிழா இம்முறையும் 14.08.2016 தொடக்கம 25.08.2016 வரையாக பன்னிரண்டு நாட்கள் நல்லூர் குறுக்கு தெருவில் உள்ள பாணான் குளத்துக்கு அருகில் உள்ள செயற்திறன் அரங்க இயக்கத்தின் திறந்த மேடையில் தினமும் மாலை 7 மணி முதல் நடைபெறவுள்ளது.

நாடகங்கள் முறையே நெடுங்குச்சியாட்டம், முயலார் முயல்கிறா
ர் (சிறுவர் நாடகம்) உருமறைப்பு (நவீன நாடகம்), பறையிசை, தூவானம் (நவீன நாடகம்) நிகழ்வின் தொடக்க நாள் 14ம் திகதி மேடையேறவுள்ளன. இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிரேஸ்ட ஆங்கில விரிவுரையாளர் கலாநிதி. கந்தையா ஸ்ரீகணேசன் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.

தொடர்ந்து 15ம் திகதி கும்மியாட்டம், ஆச்சி சுட்ட வடை (சிறுவர் நாடகம்), கைச்சிலம்ப்பாட்டம் வள்ளி திருமணம் (பாரம்பரிய இசைநாடகம்) போன்றன மேடையேறவுள்ளன. அன்றைய நாளின் பிரதம விருந்தினராக முன்னால் தமிழ்த் துறைத்தலைவர் பேராசிரியர். எஸ்.சிவலிங்கராஜா கலந்து கொள்ளவுள்ளார்.

மூன்றாம் நாளான 16.08.2016 அன்று பிரதம விருந்தினராக வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் கலந்து கொள்ளவுள்ள நிகழ்வில் கரகாட்டம், பஞ்ச வர்ண நரியார் (சிறுவர் நாடகம்), சாட்டைக்குச்சியாட்டம், புதைக்கப்பட்ட சடங்கு (நவீன நாடகம்) போன்றன மேடையேறவுள்ளன.

தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த நாடகத் திருவிழாவில் தென்னிந்தியப் பாரம்பரியக்கலைகள், நவீன நாடகங்கள், சிறுவர் நாடகங்கள், பாரம்பரிய நாடகங்கள் மற்றும் வேடமுக நாடகம் போன்ற நாடகங்கள் மேடையேறவுள்ளன.

Related posts

*

*

Top