இராஜயோக நிலைய விவாதப்போட்டியில் கிளிநொச்சி புனித திரேசா வெற்றி

பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையங்களின் யாழ். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகம் முன்னெடுத்த விழுமியங்களின் விவாதப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டி கடந்த 07.08.2016 அன்று யாழ். கலட்டிச் சந்திக்கு அண்மையில் உள்ள பிரம்மகுமாரிகள் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் சுகதாமம் மண்டபத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாண உயர்தரப் பாடசாலைகளை மையப்படுத்தி நடத்தப்பட்ட இப்போட்டிகளில் 36 பாடசாலைகள் பங்கெடுத்திருந்தன. இறுதிப்போட்டி வளர்க்கப்படவேண்டியது எது? சுதந்திரமா? சகிப்புத் தன்மையா? என்ற தலைப்பில் இடம்பெற்றது.

இறுதிப்போட்டியில் கிளிநொச்சி புனித திரேசா மகளிர் கல்லூரி வெற்றியீட்டியது. போட்டியின் நடுவர்களாக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன், யாழ். பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா, வாழைச்சேனை, வட்டவான் கலைமகள் வித்தியாலய அதிபர் சுதாகரி மணிவண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

விவாதப்போட்டியில் கிளிநொச்சி புனித திரேசா வெற்றி (1) விவாதப்போட்டியில் கிளிநொச்சி புனித திரேசா வெற்றி (2) விவாதப்போட்டியில் கிளிநொச்சி புனித திரேசா வெற்றி (3) விவாதப்போட்டியில் கிளிநொச்சி புனித திரேசா வெற்றி (4) விவாதப்போட்டியில் கிளிநொச்சி புனித திரேசா வெற்றி (5) விவாதப்போட்டியில் கிளிநொச்சி புனித திரேசா வெற்றி (6)

Related posts

*

*

Top