குப்பிளான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய இரதோற்சவப் பெருவிழா

– எஸ். ரவி  

குப்பிளான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய இரதோற்சவப் பெருவிழா கடந்த 17.08.2016 புதன்கிழமை காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது.

காலையில் விநாயகப் பெருமானுக்கு விசேட அபிடேக, ஆராதனைகளைத் தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று விநாயகப் பெருமான் உள்வீதியுலா வந்து திருத் தேரில் ஆரோகணித்த காட்சி அடியார்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

தேரின் முன்பு குவித்து வைக்கப் பட்டு இருந்த ஆயிரக்கணக்கான தேங்காய்களை இளைஞர்கள் உடைத்ததைத் தொடர்ந்து சரியாக 11.30 மணிக்கு தேர் இருப்பிடத்தில் இருந்து நகர்ந்தது. ஏராளமான அடியவர்கள் கற்பூரச் சட்டி ஏந்தியும், அடி அளித்தும், பிரதட்டை அடித்தும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

குப்பிளானில் இருந்து மட்டுமல்ல, வெளியூர்களில் இருந்தும், புலம்பெயர் தேசங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான அடியவர்கள் இரதோற்சவப் பெருவிழாவில் கலந்து கொண்டனர். விநாயகப் பெருமானின் பெரிய தேர் முன்பே செல்ல, முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சகிதம் சிறிய தேரிலும், அதன் பின்பு மிகச் சிறிய தேரில் மணிவாசகப் பெருமானும் வெளிவீதியுலா வந்தனர்.

வெயில் சுடடெரித்தாலும் தொண்டர்கள் உழவு இயந்திரம் மூலம் வெளி வீதியில் நீரை விசிறி பக்தர்களை சூரிய பகவானிடம் இருந்து பாதுகாத்தனர். ஆலயத்தில்மூன்று இடங்களில் தாக சாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு அதில் சர்பத், கிறீம் சர்பத், நெல்லிரசம் ஆகியன பக்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

ஆலய நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க வயாவிளான் மத்திய மகா வித்தியாலய சாரணர்களும் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும், பாதுகாப்பிலும் ஈடுபட்டு இருந்தனர். தேர் இருப்பிடத்தை அடைந்ததும், விசேட மேளக் கச்சேரி இடம்பெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்ட்து.

அன்னதான மண்டபத்தில் ஒரே நேரத்தில் சுமார் 200 பேரே இருந்து சாப்பிடக் கூடிய வசதி உள்ளமையினால், குவிந்த அதிகளவு பக்தர்களைச் சமாளிக்க அன்னதான தொண்டர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். பல்வேறு கட்டங்களாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டன.

இறுதியாக விநாயகப் பெருமானுக்கு பச்சை சாத்தப்பட்டு தேரிலிருந்து அவரோகணித்து ஆலயத்தினுள் சென்று இருப்பிடத்தை சென்றடைந்தார். ஊர் மக்கள், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தங்கள் உறவுகள், நண்பர்களை சந்திக்கும் ஒரு திருநாளாகவும் இந்தத் தேர்த்திருவிழா அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 கற்பக விநாயகர் ஆலய இரதோற்சவப் பெருவிழா (1) கற்பக விநாயகர் ஆலய இரதோற்சவப் பெருவிழா (2) கற்பக விநாயகர் ஆலய இரதோற்சவப் பெருவிழா (3) கற்பக விநாயகர் ஆலய இரதோற்சவப் பெருவிழா (4) கற்பக விநாயகர் ஆலய இரதோற்சவப் பெருவிழா (5) கற்பக விநாயகர் ஆலய இரதோற்சவப் பெருவிழா (6) கற்பக விநாயகர் ஆலய இரதோற்சவப் பெருவிழா (7) கற்பக விநாயகர் ஆலய இரதோற்சவப் பெருவிழா (8) கற்பக விநாயகர் ஆலய இரதோற்சவப் பெருவிழா (9) கற்பக விநாயகர் ஆலய இரதோற்சவப் பெருவிழா (10) கற்பக விநாயகர் ஆலய இரதோற்சவப் பெருவிழா (11) கற்பக விநாயகர் ஆலய இரதோற்சவப் பெருவிழா (12) கற்பக விநாயகர் ஆலய இரதோற்சவப் பெருவிழா (13)

Related posts

*

*

Top