யதார்த்தவாதி வெகுசன விரோதி – யேசுதாசன் இக்னேசியஸ்

– அ.பெஸ்ரியன்

கலை இலக்கிய படைப்பாளி, விமர்சகர், யாழ்ப்பாணத்தில் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவரான அ.யேசுராசா யதார்தமான ஓரு படைப்பாளி, அவருடைய  ‘நினைவுக் குறிப்புகள்’ நூல் அனுபவத்தின் உச்சங்கள். இப்புத்தகத்தில் ஒரு இடத்திலே அவர் குறிப்பிட்டுள்ளார் ‘யதார்த்தவாதி வெகுசன விரோதி’ உண்மை, யதார்த்தத்தை பேசுபவர்கள் எவரும் எல்லா நேரமும் எல்லா இடமும் மதிக்கப்பட மாட்டார்கள். எல்லாராலும் நேசிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்தார் யேசுதாசன் இக்னேசியஸ்.

யதார்த்தவாதி வெகுசன விரோதி - யேசுதாசன் இக்னேசியஸ் (2)

அ.யேசுராசாவின் ‘நினைவுக் குறிப்புகள்’ நூலின் அறிமுகவுரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடல் கடந்தும் இலக்கியப் படைப்பாளிகளோடும் விமர்சகர்களோடும் நல்ல உறவுகளை வைத்துள்ளார். தமிழகம் வரை சென்று ஈழத்துப் படைப்புகளை அங்கே அறிமுகப்படுத்தும் ஒரு பாலமாக செயல் பட்டிருப்பதை இந்நூலினூடாக அறியக் கிடைக்கிறது.  இதில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு அனுபவமும் நுனுக்கமாக பார்க்கப்பட்டிருக்கிறது. தன்னுடைய இலக்கிய விமர்சனங்களுக்கு அப்பால் திரைப்பட விமர்சனங்களும் இவருடைய விமர்சனங்களால், விமர்சனங்களே வேண்டாம் என்ற சில உள்ளங்களைப் பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

குருநகர் கலை இலக்கிய அமைப்பு முன்னெடுத்த அ.யேசுராசாவின் ‘நினைவுக் குறிப்புகள்’ நூலின் அறிமுக நிகழ்வு நேற்று 21.08.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு குருநகர் சென்.ஜேம்ஸ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது .

அருட்பணி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வரவேற்புரையை கு. இராயப்புவும், அறிமுகவுரையை யேசுதாசன் இக்னேசியசும், மதிப்பீட்டுரையை தி.செல்வமனோகரன், த. அஜந்தகுமார் ஆகியோரும் நன்றியுரையை இன்பகுமாரும் நிகழ்த்தினர். ஏற்புரையினை நூலாசிரியரும் நிகழ்த்தினர்.

ஒளிப்படங்கள் :  யாத்திரீகன்

யதார்த்தவாதி வெகுசன விரோதி - யேசுதாசன் இக்னேசியஸ் (1) யதார்த்தவாதி வெகுசன விரோதி - யேசுதாசன் இக்னேசியஸ் (3) யதார்த்தவாதி வெகுசன விரோதி - யேசுதாசன் இக்னேசியஸ் (4) யதார்த்தவாதி வெகுசன விரோதி - யேசுதாசன் இக்னேசியஸ் (5) யதார்த்தவாதி வெகுசன விரோதி - யேசுதாசன் இக்னேசியஸ் (6) யதார்த்தவாதி வெகுசன விரோதி - யேசுதாசன் இக்னேசியஸ் (7) யதார்த்தவாதி வெகுசன விரோதி - யேசுதாசன் இக்னேசியஸ் (8) யதார்த்தவாதி வெகுசன விரோதி - யேசுதாசன் இக்னேசியஸ் (9) யதார்த்தவாதி வெகுசன விரோதி - யேசுதாசன் இக்னேசியஸ் (10) யதார்த்தவாதி வெகுசன விரோதி - யேசுதாசன் இக்னேசியஸ் (12)

Related posts

*

*

Top