கொழும்பில் திருமறைக் கலாமன்றத்தின் நாடக விழா

Barack Obama

நீண்டகால இடைவெளிக்கு பின்னர் தலைநகர் கொழும்பில் திருமறைக் கலாமன்றம் நடத்தும் நாடக விழா நாளை 27.08.2016 சனிக்கிழமை மற்றும் நாளை மறுநாள் 28.08.2016 ஞாயிற்றுக்கிழமை வெள்ளவத்தை இராமகிருஸ்ண மிஷன் மண்டபத்தில் மாலை 05.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

திருமறைக் கலாமன்றத்தின் பல்லினக் கலைஞர்களின் இணைவில் இடம்பெறவுள்ள இந்நாடக விழாவில் நான்கு அளிக்கைகள் அரங்கேறவுள்ளன. முதலாம் நாளில் குசேலர் இசை நாடகமும், 13.710 ஸ்ரீ என்னும் வார்த்தைகளற்ற நாடகமும் இரண்டாம் நாளில் மஹாகவியின் புதியதொரு வீடு கவிதை நாடகமும், அசோகா இசை அபிநய அளிக்கையும் மேடையேற்றப்படவுள்ளன.

கொழும்பு வாழ் நாடக இரசிகர்கள் ஆர்வலர்கள் மற்றும் நாடகத்துறை சார் மாணவர்கள் அனைவருக்கும் அரியதோர் சந்தர்ப்பமாக இந்நாடக விழா அமையவுள்ளது. இந்நாடக விழாவுக்கான அனுமதி முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

*

*

Top