மூன்று நாள் பயணமாக இன்று இலங்கை வரும் பான் கி மூன்

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐநா பொது செயலாளர் பான் கி மூன் இன்று  31.08.2016 புதன்கிழமை கொழும்பு வருகின்றார்.

அவர் தனது விஜயத்தின் போது, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும், வெளி விவகார அமைச்சர் மற்றும் முக்கியஸ்தர்களையும் கொழும்பில் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தவுள்ளார். மேலும், பான் கி மூன் நாட்டின் தென் பகுதியில் உள்ள காலிக்கு விஜயம் மேற்கொள்வதுடன், வடக்கில் யாழ்ப்பாணத்திற்கு வெள்ளியன்று செல்லவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தலைவர்களை சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தவுள்ள அவர், பின்னர் வடமாகாண அளுனர் ரெஜினோல்ட் குரே மற்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோரையும் தனித்தனியே சந்தித்துப் பேச்சுக்கள் நடத்துவார்.

அன்றைய தினம் கொழும்புக்குத் திரும்பும் பான் கி மூன், கொழும்பில் ஊடகவியலளார்களைச் சந்திப்பதுடன் அவருடைய இலங்கைக்கான விஜயம் முற்றுப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

*

*

Top