சொரியாசிஸ்: தொல்லை தரும் தோல் நோய்

ஒருவரின் அழகுக்கு தோலின் இயல்புத் தன்மை மிக முக்கியமானது. இதனால்தான் தோல் வியாதிகள் ஏற்படும்போது பலரும் உளவியல் ரீதியில் பாதிப்புக்குள்ளாவதுடன் தாழ்வுச்சிக்கலினால் துவண்டு போகின்றார்கள்.

பெரும்பாலான தோல் வியாதிகள் குணமாக்கக் கூடியவை. சிலவற்றை குணமாக்க நீண்ட நாட்கள் எடுக்கும். இன்னும் சிலவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமே­யன்றி குணப்படுத்தல் சிரமமான காரியமாகும். மனிதனுக்கு மன உளைச்சளையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும் தோல் நோய்களில் சொரியாசிஸ் நோயும் ஒன்றாகும். இது ஒரு தொற்றுநோயோ அல்லது ஒவ்வாமை நோயோ அல்ல.

இந்தநோய் ஒருவரின் நோய் எதிர்ப்புடன் தொடர்பான ஒரு அழற்சி நோயாகும். சொரியாசிஸ் தோல் நோயாளர்களின் செந்நிறமான செதில் மிதப்புக்கள் தோன்றி இது நீண்டகாலமாக இருக்கும்.

பொதுவாக முழங்கை, முழங்கால், தலை என்பவற்றில் இந்த படர்வு அதிகமாக காணப்படினும் ஏனைய இடங்களிலும் தோன்றலாம். ஆண்=பெண் என இருபாலரையும் பீடிக்கும் இந்த தோல் வியாதி சிறுவர்களில் அதிகமாகவே ஏற்படுகின்றது.

பொது­வாக 50 – -95 வயது கடந்தவர்களில் ஏற்படுவதில்லை. 21 வயது முதல் 30 வயது வரையிலானவர்களை அதிகம் பிடிக்கும் இந்த நோய் 41 வயது முதல் 50 வயதானவர்களையும் ஓரளவு பீடிக்கிறது. மது, புகைத்தல் நோயை தீவிரப்படுத்தும். சொரியாசிஸ் தோல் வியாதி பொதுவாக அரிப்பை ஏற்படுத்துவதில்லை.

இந்த நோய் உள்ளவர்களில் மூட்டுக்களிலும் வலி ஏற்படலாம். இதை சொரியாற்றிக் ஆத்ரைற்றில் என்று அழைப்பர். சொரியாசிஸ் நோயுடன் இணைந்து குடற்பகுதியில் (Ulcerative Colitis) இதய குருதிக்குழாய் நோய்களில் மனநெருக்கீடு இதூக்கமின்மை என்பனவும் ஏற்படலாம்.

சொரியாசிஸ் நோய்க்கு சிகிச்சையளித்தல் சிரமம். இது ஒரு நீண்டகால தோல்நோய் என்பதுடன் சில நிற முகூர்த்த தொடர்புகளும் சிலரில் Lympoma என்ற புற்றுநோய் இணைந்து இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

புற்றுநோய்க்கு பாவிக்கும் சில மருந்துகள் சொரியாசிஸ் நோயை குணப்படுத்தக் கூடியவை. எனினும் தீவிர கண்காணிப்புஇ குருதி பரிசோதனை என்பவற்றுடனேயே இம் மருந்துகளை உங்கள் வைத்தியர் வழங்குவார். 55வயதுக்கு மேற்பட்டவர்களின் நோயின் தீவிரமும் பரம்பலும் குறைவடைகிறது.

Related posts

*

*

Top