மூத்த பத்திரிகையாளர் கே. ஜி.மகாதேவா காலமானார்

மூத்த பத்திரிகையாளரும், யாழ்ப்பாணம் ‘ஈழநாடு’ பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியருமான கே.ஜி. மகாதேவா சென்னையிலுள்ள தனியார் மருத்துமனை ஒன்றில் தனது 76-வது வயதில் இன்று 11.09.2016 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.

சுகவீனமுற்ற நிலையில் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், இரண்டு மாதகாலமாகச் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார்.

கண்டியிலிருந்து வெளிவந்த ‘செய்தி’ பத்திரிகையிலும் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘ஈழநாடு’ பத்திரிகையிலும் பணியாற்றிய கே.ஜி.மகாதேவா, போர் நெருக்கடி மிகுந்த காலப்பகுதியில் ஈழநாடு பத்திரிகையில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றியவர்.

யுத்த நெருக்கடி காரணமாகத் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்த மகாதேவா திருச்சி நகரில் வசித்து வந்தார். இலங்கையில் ‘தினக்குரல்’ பத்திரிகைக்கும் ‘ஞானம்’ சஞ்சிகைக்கும் தமிழகத்துச் செய்திகளை – இலக்கியத் தகவல்களைத் தொடர்ந்து வழங்கி வந்தார். தனது பத்திரிகைத்துறை அனுபவங்களை நூலாகவும் வெளியிட்டுள்ளார்.

Related posts

*

*

Top