தேசிய மட்டத்தில் சம்பியனானது சென்.பற்றிக்ஸ்

பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்டக் கால்பந்தாட்டப் போட்டியில் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியனானது. இந்த பிரிவில் வெள்ளிப்பதக்கத்தை இளவாலை சென். ஹென்றிஸ் கல்லூரியும், வெண்கலப் பதக்கத்தை மன்னார் சென். லூசியஸ் கல்லூரியும் தாமதாக்கிக் கொண்டன.

அநுராதபுரத்தில் இடம்பெற்று வரும் இத்தொடரின் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து சென்.ஹென்றிஸ் கல்லூரி அணி மோதியது.

இந்நிலையில், கோல்கள் இல்லாமல் முடிவுக்கு வந்தது முதல் பாதி ஆட்டம். இரண்டாம் பாதியின் 33 ஆவது நிமிடத்தில் சென். பற்றிக்ஸின் முதல் கோலைப் பதிவு செய்தார் வினின். பதிலடி கொடுக்க முனைப்பு காட்டியது சென்.ஹென்றிஸ். வேறெந்த மாற்றமும் ஏற்படாத வகையில் அமைந்தது .முடிவில் 1:0 என்ற கோல் கணக்கில் கிண்ணத்தை சுவீகரித்தது சென் .பற்றிக்ஸ் அணி.

முன்னதாக இடம்பெற்ற மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் மன்னார் சென். லூசியஸ் கல்லூரி அணியை எதிர்த்து அனுராதபுரம் சென்.ஜோசப் கல்லூரி அணி 2:1 என்ற கணக்கில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

தேசியமட்டப் போட்டிகளில் ஒரு விளையாட்டுப் பிரிவில் வடக்கு மாகாணத்தின் அணிகள் முதல் மூன்று இடங்களையும் கைப்பற்றுவது இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

*

*

Top