இலக்கியவாதி குறமகள் காலமானார்

ஈழத்தின் ஆரம்பகால பெண் எழுத்தாளர்களில் ஒருவரும் சமூகச் செயற்பாட்டாளரும், நாடகம், பட்டிமன்றம், மேடைப்பேச்சு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டவரும்பத்திரிகையின் எழுத்தாளருள் ஒருவருமான குறமகள் என்று பரவலாக அறியப்பட்ட திருமதி. வள்ளிநாயகி இராமலிங்கம் நேற்று 15.09.2016 வியாழக்கிழமை ரொறன்ரோவில் காலமானார்.

ஈழத்தின் வடக்கே – காங்கேசன்துறையில் ஜனவரி 9, 1933இல் பிறந்தவர் குறமகள். தனது பாடசாலைக் கல்வியை நடேஸ்வராக் கல்லூரியிலும் இளவாலை திருக்குடுப்பக் கன்னியர்மடத்திலும் கற்ற இவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் பயிற்றப்பட்ட ஆசிரியராவார். இந்தியாவில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டதாரியாகக் கல்விகற்றவர். பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நாடகவியலிலும் கல்வியியலிலும் பட்டயச்சான்றிதழ் (னுipடழஅய) தகைமைகளைப் பெற்றுக்கொண்டவர்.

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும் அளுத்கம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர்.

ஈழத்திலும் பின்னர் புலம்பெயர்ந்து கனடாவிலும் தனது எழுத்துக்களின் ஊடாகவும் பேச்சுக்களின் ஊடாகவும் பெண்களின் விடுதலைக்கும், சமத்துவத்துக்குமாகத் தொடர்ந்து குரல் கொடுத்தும் செயற்பட்டும் வந்தவர். தமிழ்ச் சமூகத்துக்கு அவரது முக்கிய பங்களிப்பாக அவரது யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கள் கல்வி என்கிற ஆய்வு நூலைக் குறிப்பிடலாம்.

Related posts

*

*

Top