யாழ். சர்வதேசத் திரைப்படவிழா 2016இல் நடைபெறவுள்ள புலமைசார் வகுப்புகள்

– கணபதி சர்வானந்தா

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதலாவது முறையாக நடைபெற்ற யாழ்ப்பாண சர்வதேசத் திரைப்பட விழாவைத் தொடர்ந்து இம்முறையும் இரண்டாவது தடவையாக எதிர்வரும் செப்டெம்பர் 23 ஆம் திகதி தொடக்கம் 27 வரை யாழ்ப்பாண சர்வதேசத் திரைப்பட விழா 2016, நடைபெறவிருக்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி மண்டபத்திலும், கார்கில்ஸ் சதுக்கத்திலுள்ள மஜெஸ்ரிக் திரையரங்கத்திலும், யாழ். பொதுசன நூலகக் கேட்போர் கூடத்திலுமாக மொத்தம் மூன்று மையங்களில் திரைப்படங்கள் திரையிடப்படவிருக்கின்றன. இந்தத் திரைப்படங்களைப்  பார்ப்பதற்கு அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இலங்கை இளம் தமிழ் திரைத் தயாரிப்பாளர்கள் நலனைக்கருத்தில் கொண்டு மூன்று புலமையாளர்கள் திரைத்துறை சம்பந்தமான வகுப்புகள் நடைபெறவிருக்கின்றன. இவை கட்டண அடிப்படையில் நடத்தப்படுகின்றன. மூன்று வகுப்புக்களிலும் பங்குபற்ற விரும்புகிறவர்களுக்கு சலுகை வழங்க விருப்பதாகவும் மாணவர்களுக்கு மிகவும் குறைவான கட்டணம் அறவிடப்பட இருப்பதாகவும் விழாக்குழு தெரிவித்திருக்கிறது. மேலதிக விபரங்களை அறிய விரும்புபவர்கள் விழா முகாமையாளரை manager@jaffnaicf.lk என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அவரின் கையடக்கத் தொ லைபேசி இல. 1094778214669 இலும் அல்லது விழாவின் பின்வரும் info@jaffnaicf.lk என்ற இணைய முகவரியிலும் பெற்றுக் கொள்ளலாம். பிற மொழியில் நடைபெறுகின்ற வகுப்புக்களில் தமிழ் மொழிபெயர்ப்பு இடம்பெறும்.

செப்டெம்பர் 25 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற முதலாவது வகுப்பு குறும்படங்களுக்கான ஒலி வடிவமைப்பு பற்றியது. தனது துறையில் பல விருதுகளை வென்ற முன்னணிக் கலைஞரான சியாமன் பிரேமசுந்தர இந்த வகுப்பை நடத்தவிருக்கிறார்.

செப்டெம்பர் 26 ஆம் திகதி இரண்டாவது வகுப்பு திரைப்படத் தொகுப்புப் பற்றியது. திரைப்படத் தொகுப்பில் கையாளப்படுகின்ற மென்முறை, வன்முறை பற்றிய வகுப்பை ஜேர்மனியின் பிரபல முன்னணிக் கலைஞரும் தனது துறை சார்ந்து பல விருதுகளை வென்றவருமான அன்றியா வென்ஸ்லர் (Andrea Wenzler from Germany)  நடத்தவிருக்கிறார்.

செப்டெம்பர் 27ஆம் திகதி மூன்றாவது வகுப்பு நடிப்புப்ப ற்றியது. நடிப்பில் கையாளப்படுகின்ற நுணுக்கங்கள் பற்றிய வகுப்பை ‘விருமாண்டி’ திரைப்படத்தில் வில்லனாக நடிப்பில் தடம்பதித்தவரும்,  நிகழ்தியேட்டர் சென்ரரின் நிறுவனருமான எம்.சண்முகராஜா நடத்தவிருக்கிறார். இவர் தமிழ்மொழி மற்றும் இலக்கணம் பற்றிய புலமையை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பெற்றவர். அத்துடன் இயக்கமும் வடிவமைப்பும் பற்றி டெல்கி தேசிய நாடகப் பள்ளியில் படித்துப் பட்டம்பெற்றவர். மாணவப் பருவம் தொட்டு இன்றுவரை அரங்கச் செயற்பாடுகளுக்கு தன்னாலான பங்களிப்பைச் செய்து வருபவர் இத்துறையைில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு கற்பித்தலும் பயிற்சி அளித்தலையும் தனது விருப்பமாகக் கொண்டவர்

Related posts

*

*

Top