கருச்சிதைவு நாடக ஆற்றுகை

மக்கள் களரி நாடகவிழா நடமாடும் அரங்கில் யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தினரால்  ‘கருச்சிதைவு’ என்னும் நாடகம் கடந்த 17.09.1016 சனிக்கிழமை மேடையேற்றப்பட்டது. இவ்வாற்றுகை அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு அரங்கின் பல்பரிமான வளர்ச்சிப் போக்கின் புதிய தரிசனங்களுக்குள்ளும் பார்ப் போரை இட்டுச் சென்றது.

இவ் ஆற்றுகையினை யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழக நடிகர்களான இ.வினோதன், த.கில்மன், ம.சுலக்சன், த.கஜன் ஆகியோர் பங்குபற்றினர். இன் நாடகத்திற்கான காட்சி அமைப்பினை ம.சுலக்சன், .மகிந்தன், த.கஜன், இ.வினோதன், த.குணரூபன், த.கில்மன் ஆகியோரும் இணைந்து மேற்கொண்டனர். ஒளி விதானிப்பினை இ.மகிந்தன் மேற்கொள்ள, இன் நாடக நெறியாள்கையினை தி.தர்மலிங்கம்  மேற்கொண்டார்.

இந்நாடக முறைமை ஏனைய நாடகங்களை விட மாறுபட்ட முறையில் ஆற்றுகை செய்யப்பட்ட்து. யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தையும், சிந்தனைகள் பலவற்றையும் உருவாக்கக்கூடிய வகையில் மிகவும் வித்தியாசமான முறையில் வெளிப்பாடுகள் ஆற்றுகை செய்யப்பட்டது. ஒரு ‘ பூட்த்தோ ‘ நாடக வகைமையினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் எந்த வித வசனங்களோ, உரையாடல்களோ இல்லாமல் தனி உடல் மொழி மூலமாக நடிகன் அரங்கில் அழகிய கோடுகளை அர்த்தப்பாடுகளுடன் வெளிப்படுத்தும் வடிவமாகும்.

மெதுவான இசையோடு 1 மணித்தியாலங்கள் 4 நடிகர்கள் உடல்முழுவதும் வெள்ளை நிறமாக தலை முடிகள் அகற்றப்பட்டு மொட்டை வடிவமாக இடுப்பில் சிறிய ஆடை மட்டுமே அணியப்பட்டு பல்வேறுப்பட்ட கடினமான அசைவுகளுடன் ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது. இந்நாடகம் மனிதன் கருவில் இருந்து பிறந்து வளர்ந்து அவன் படும் இன்னல்கள் போட்டிகள் பொறாமைகள் பதவி ஆசைகள் ஒற்றுமையின்மை என பல்வேறுபடட விடையங்களை கொண்டமைந்திருந்தது.

இவ்வகை நாடகங்கள் அரங்கக் கலை வரலாற்றில் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது அவசியம். அது மட்டுமன்றி அதுசார் உரையாடல்களை மேற்கொள்ளுவதன் ஊடாக ஏனையவர்களுக்கும் அதன் பரம்பலையும் தனித்துவத்தையும் உணர முடியும்.

ஒளிப்படங்கள்: சிவராஜ்

%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88 %e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88 %e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88 %e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88 %e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88 %e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88 %e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88 %e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88

Related posts

*

*

Top