இரண்டாவது யாழ்ப்பாண சர்வதேசத் திரைப்பட விழா

இரண்டாவது யாழ்ப்பாணச் சர்வதேசத் திரைப்பட விழா, கடந்த 23.09.2016  வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திலுள்ள கைலாசபதி அரங்கில் கோலகலாமாக ஆரம்பிக்கப்பட்டது. தழிழர் பண்பாட்டு கலையம்சத்துடனான பறை இசையுடன் ஆரம்பமான விழாவில் இலங்கையடங்கிலுமிருந்து வருகை தந்திருந்த சினிமா ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். வெளிநாட்டு கலாசார நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் தூதரகங்களைச் சேர்ந்த பல இராஜ தந்திரிகள் உட்படப் பல உள்ளூர் பிரமுகர்கள் மங்கல விளக்கேற்ற இசை விற்பன்னர் கண்ணனின் இசைச் சங்கமத்தோடு விழா ஆரம்பமானது.

%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5 %e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5 %e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5 %e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5 %e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5 %e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5 %e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5 %e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5 %e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5 %e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5

விழாக் குழுவைச் சேர்ந்த ஜீவா பெருமாள் பிள்ளை வரவேற்புரையை நிகழ்த்த ஆரம்ப உரையை யாழ்.மாநகர ஆணையாளரும், விழாக்குழுவின் சார்பாக இயக்குனர் அனோமா இராஜகருணாவும் தொடர்ந்து சிறப்புரையைத் திண்டுக்கல், காந்தி கிராமம் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுந்தர் காளியும் நிகழ்த்தினர்.

விழாவின் ஆரம்பத் திரையிடலாக வொயிட் (VOID) என்ற லெபனான் நாட்டைச் சேர்ந்த காணமல் போன உறவுகளைத் தேடும் ஆறு பெண்கள் பற்றிய படம் திரையிடப்பட்டது.

ஒளிப்படங்கள்: அ.யேசுதாஸ், பிறைநிலா

 தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் திரை விழாவில் பல தரமான சிறப்புமிக்க படங்களை யாழ். பல்கலைக் கழக கையிலாசபதி அரங்கத்திலும், யாழ் பொதுசன நூலகத்திலுள்ள கேட்போர் கூடத்திலும் மற்றும் யாழ் ஆஸ்பத்திரி வீதியிலுள்ள காகில்ஸ் – மஜெஸ்ரிக் திரையரங்கத்திலும் இலவசமாகப் பார்க்க முடியும்.

jiff-time-tablejiff-tame-table-2

Related posts

*

*

Top