42 ஆவது தேசிய விளை­யாட்டு விழா இன்று ஆரம்பம்

யாழ்ப்­பாணம் துரை­யப்பா மைதா­னத்தில் முதல்முறையாக  42ஆவது தேசிய விளை­யாட்டு விழா இன்று 29.09.2016 வியாழக்கிழமை கோலா­க­ல­மாக ஆரம்­ப­மா­கியது.

எதிர்­வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி வரையில் நடை­பெறும் இத் தேசிய விழாவின் ஆரம்ப நிகழ்வு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவின் தலை­மையில் இன்று பிற்­பகல் 3 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது. இவ்­ ஆரம்ப நிகழ்வில் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம், விளை­யாட்­டுத்­துறை பிர­தி­ய­மைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்கி­னேஸ்­வரன், வட­மா­காண கல்வி மற்றும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தம்­பி­ராஜா குரு­கு­ல­ராஜா உட்­பட முன்னாள் இந்நாள் வீரர்கள் எனப் பலர் கலந்து கொள்­கின்­றனர்.

1967ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட தேசிய விளை­யாட்டு விழா இம்­முறை ‘விளை­யாட்டின் மூலம் ஐக்­கி­யத்­தையும் இன ஒற்­று­மை­யையும் ஏற்­ப­டுத்­துவோம்’ என்ற தொனிப்­பொ­ருளில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க ஆகி­யோரின் கருத்­திட்­டத்­திற்கு அமை­வாக விளை­யாட்­டுத்­துறை அமைச்சு இவ்­வி­ளை­யாட்டு விழாவை முன்­னெ­டுப்­ப­தற்­கு­ரிய அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் பூர்த்தி செய்­துள்­ளது.

தேசிய தீபம்

42ஆவது தேசிய விளை­யாட்டு விழாவின் பிர­தான நிகழ்­வான தேசிய தீபத்தை ஏற்றும் வாய்ப்பு இலங்கையின் முன்னாள் கால்­பந்­தாட்ட வீர­ரான சூசைப்­பிள்ளை அந்­த­னிப்­பிள்ளை க்ளிபர்ட்டுக்கும் வலைப்பந்­தாட்ட அணியின் முன்னாள் தலைவி ஜெயந்தி சோம­சே­கரம் டி சில்­வா­வுக்கும் கிட்­டி­யுள்­ளது.

ஜெயந்தி சோம­சே­கரம்

வலைப்­பந்­தாட்ட வீராங்­க­னை­யாக, தலை­வி­யாக, பயிற்­று­ந­ராக, நிர்­வா­கி­யாக சிறந்த மெய்­வல்­லு­ந­ராக பிரகா­சித்த இவர் வேம்­படி மகளிர் கல்­லூ­ரியின் பழைய மாண­வி­யாவார்.

இவர் இலங்கை வலை­ப்பந்­தாட்டம் மற்றும் மகளிர் கூடை­பந்­தாட்ட அணி­களில் இடம்­பெற்­றி­ருந்­த­தோடு வலை­ப்பந்­தாட்ட அணிக்கும் தலைமை தாங்­கி­யி­ருந்தார். தற்­போது ஹட்டன் நெஷனல் வங்­கியில் கிளை முகா­மை­யா­ள­ராக கட­மை­யாற்றும் இவர் வர்த்­தக வலைப்­பந்­தாட்ட சங்­கத்தின் தலை­வி­யாக செயற்­பட்டு வரு­கின்றார்.

சூசைப்­பிள்ளை அந்­த­னிப்­பிள்ளை

யாழ். சென்ட் ஜோன்ஸ் கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ரான இவர் 1969 ஆம் ஆண்டு இலங்கை பாட­சா­லைகள் அணி­யிலும் 1972 ஆம் ஆண்டு தேசிய அணி­யிலும் இடம்­பெற்­ற­துடன் கல்­லூ­ரியின் அதி உயர் ஜொனியன் ஈகிள் விருதை 1972 ஆம் ஆண்டு முத­லா­ம­வ­ராக வென்­றெ­டுத்­த­வ­ராவார். கலைத்­துறை பட்­ட­தா­ரி­யான இவர் இக்­கல்­லூ­ரியில் உதவி அதி­ப­ரா­கவும் கட­மை­யாற்­றி­யி­ருந்தார்.

கால்­பந்­தாட்டத்தில் யாழ். மாவட்­டத்தில் அதி சிறந்த வீர­ராக விளங்­கிய இவர் சி பிரிவு பயிற்­றுநர் சான்றிதழைக் ­கொண்­டுள்ளார். தனது கல்­லூரி, மாவட்ட கழ­கங்கள் மற்றும் பல்­க­லைக்­க­ழக அணிகள் என பல­வற்­றுக்கு பயிற்­று­ந­ராக செயற்­பட்ட இவர் யாழ். கால்­பந்­தாட்ட லீக்கின் தலை­வ­ராக பதவி வகித்­தி­ருந்தார். அத்­தோடு முதல்­தர நடு­வ­ரா­கவும் செயற்­பட்­டி­ருந்தார்.

இது­வரை 25 வகை­யான விளை­யாட்டுப் போட்­டி­களே நடை­பெற்று வந்­தி­ருந்த நிலையில் இம்­முறை புதி­தாக எட்டு வகை­யான விளை­யாட்டுப் போட்­டிகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு நடத்­தப்­படவுள்ளன. மெய்­வல்­லுநர் போட்­டி­க­ளுடன் கயி­றி­ழுத்தல், கூடைப்பந்தாட்டம், கடற்­கரை கபடி, கால்­பந்­தாட்டம் உள்­ளிட்­டங்­க­லாக மொத்­த­மாக 33 வகை­யான போட்­டிகள் இம்­முறை இடம்­பெ­ற­வுள்­ள­தோடு 1700 மெய்­வல்­லு­நர்கள் பங்குபற்றவுள்­ளனர். அத்­துடன் 900 உத்­தி­யோ­கத்­தர்­களும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

இதே­வேளை, 42ஆவது தேசிய விளை­யாட்டு விழாவை நடத்­து­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக 9 மாகா­ணங்­க­ளையும் சேர்ந்த போட்­டி­யா­ளர்கள் தங்­கு­வ­தற்­காக ஐந்து பாடசாலை­களில் ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. அதே­போன்று நடு­வர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்­களும் களத்தில் செயற்­ப­டு­வ­தற்கு தயா­ரா­க­வி­ருக்­கின்­றனர்.

மேலும் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்தில் அனைத்து தயார்ப்­ப­டுத்­தல்­களும் நிறைவு செய்யப்பட்டுள்ள­தோடு, கிளி­நொச்சி மாவட்­டத்­திலும் ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள தேசிய விளை­யாட்டு விழா நிறைவு விழாவில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன், வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன் ஆகியோர் பங்­கேற்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

*

*

Top