இலங்கை சுதந்திர போக்குவரத்து ஊழியர் சங்கப் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு

பல காலமாக தொடர்ந்து வரும் இலங்கை சுதந்திர போக்குவரத்து ஊழியர் சங்கப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு இவ்விடயம் தொடர்பாக நேற்று 02.10.2016  ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர இந்த கலந்துரையாடலை மேற்கொண்டார்.

2

இதன் ஒரு அங்கமாக வடக்கில் பலவருட காலமாக செயற்படாமல் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திர போக்குவரத்து ஊழியர் சங்கத்தினை கடந்த ஐந்து வருடத்திற்கு மேலாக சிறந்த முறையில் இயங்க வைத்து ஊழியர்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி மற்றும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் இலங்கை போக்குவரத்து சபையானது சுதந்திரமாக இயங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை தான் மேற்கொண்டுள்ளதாகவும் ஊழியர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் எப்பொழுதும் தனது பணி தொடரும் என்றும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் தொடர்பாக தயாசிறி ஜெயசேகர கருத்து தெரிவிக்கையில் வட மாகாண இலங்கை போக்குவரத்து சபையின் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் என்னுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறார் எனக் குறிப்பிட்டார்.

மேலும் தற்பொழுது ஜனாதிபதியும், போக்குவரத்து அமைச்சரும், அங்கஜன் ராமநாதனும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்தவர்கள். இவர்களால் தான் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் இதுவரை காலமும் இருந்து வந்த இழுபறி நிலைகளுக்கு தீர்வு காணப்பட்டு விட்டன. நாம் அனைவரும் ஒரு நாட்டு மக்கள். பேசுகின்ற மொழி இரண்டாக உள்ளதே தவிர நாம் அனைவரும் ஒருவரே என்றும் தெரிவித்துள்ளார்.

என்னிடம் கூறியிருக்கின்ற பிரச்சினைகள் மற்றும் எழுத்து மூலமாக தந்த கோரிக்கைகளுக்கு நிச்சயமாக தீர்வு காணப்படும். நீங்கள் எந்த பிரச்சினை என்றாலும் அங்கஜன் இராமநாதன் ஊடாக எனக்கு தெரியப்படுத்தினால் அதற்கான தீர்வுகளை கண்டிப்பாக பெற்று தருவேன் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.  இவ்வுரையாடலில்  கோண்டாவில், பருத்தித்துறை. கிளிநொச்சி மற்றும் காரைநகர் சாலை ஸ்ரீலங்கா சுதந்திர போக்குவரத்து ஊழியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

*

*

Top