அரங்கதிறன் விருத்தி நாடக கூத்து பயிற்சி பட்டறை நிகழ்வு

வடமாகான பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் வலிமேற்க்கு சங்கானை பிரதேச செயலக கலாசார பிரிவின் ஒழுங்குபடுத்தலில் சங்கானை பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட நாடக ஆர்வலர்களுக்கான அரங்கதிறன் விருத்தி நாடக கூத்து பயிற்சி பட்டறை நிகழ்வு தொல்புரம் காலாய மண்டபத்தில் 14.10.2016 வெள்ளிக்கிழமை, 15.10.2016 சனிக்கிழமை,  16.10.2016 ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்கள் வலிமேற்கு சங்கானை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் த.அமலதாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இப்பயிற்சி பட்டறையின் வளவாளர்களாக நாடக கலைஞரும் வலிகாமம் கல்வி வலயத்தின் ஆரம்ப பிள்ளைபருவ அபிவிருத்தி உதவிக்கல்விப்பணிப்பாளர் ச.கிருபானந்தன், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நாடகத்துறை ஆசிரியரும் புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளருமான எஸ்.ரி.குமரன், தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரியின் நாடக ஆசிரிரும் ஆரோகான அரங்க கல்லூரியின் இயக்குநருமான அ.அயூரன், மானிப்பாய் இந்துக்கல்லூரியின் நாடகத்துறை ஆசிரியரும் புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாக பணிப்பாளருமான எஸ்.ரி.அருள்குமரன், காவடி கரகாட்டக்கலைஞர் சி.மயில்வாகனம் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளினை வழங்கினார்கள்.

இப்பயிற்சி பட்டறையில் தலைமைத்துவம், கற்பனையாக்கம், எண்ணக்கரு விருத்தியாக்கம், நவீன நாடக உத்திகள், நடிப்பு, நெறியாழ்கை, இசைநாடகம், கூத்து, கரகம், காவடியாட்டம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இப்பயிற்ச்சிப்பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பயிற்ச்சிப்பட்டறை இறுதி தினமாகிய 16.10.2016 ஞாயிற்றுக்கிமை கலாலய மண்டபத்தில் கலாசார உத்தியோகத்தர் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்விற்க்கு பிரதம விருந்தினராக சங்கானை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.உதயசூரியன் கலந்து கொண்டார். ஏனைய அதிதிகளாக பண்டிதர் ந.கடம்பேசுவரன், சங்கானை பிரதேச செயலக கிறிஸ்தவ கலாசார உத்தியோகத்தர் த.வசந்தன், கலாபூஷணம் இசைமாணி சி.கணபதிப்பிள்ளை, புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் இ நிர்வாகப்பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். பயிற்சி நெறியில் கலந்து கொண்ட பயிற்சியாளர்களிற்க்கான சான்றிதழ்கள் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

%e0%ae%85%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95 %e0%ae%85%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95

Related posts

*

*

Top