எஸ்போவுடனும் ஜீவாவோடும் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை – தேவி பரமலிங்கம்

நான் ஜீவாவின் நிகழ்வில் பேசுவதைப் பலர் வியப்பாக நோக்கலாம். இதுபோல எஸ்போவின் கூட்டத்தில் கலந்து கொண்டதால் எனக்கு கொள்கை இல்லை என்றும் கருதுவார்கள். எஸ்போவுடனும் ஜீவாவோடும் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை எனத் தெரிவித்தார் மக்கள் கலை இயக்கியப் பெருமன்றத்தின் தலைவர் தேவி பரமலிங்கம்.

மக்கள் கலை இயக்கியப் பெருமன்றத்தின் ஏற்பாட்டில் நானிலம் இணையத்தின் ஊடக அனுசரனையில் ‘ஜீவாவுடன் ஓரு மாலைப் பொழுது’ நிகழ்வு நேற்று 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி தொடக்கம் 6 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்…

ஆயினும் மக்களிடம் பெற்று மக்களிடம் காணப்படும் முரண்பாடுகளை செப்பனிடும் இலக்கியம் படைக்க எழுதுகோல்களைத் தூக்கியுள்ள இலக்கியக்காரர்களிடம் முரண்பாடுகள் அதிகரித்துக் கொண்டு வருவதை அவதானிக்க முடிகிறது. அதனாலேயே என்னை அந்தக் கண்ணுடன் பார்க்கின்றனர். மனிதநேய எண்ணத்துடனே என்னுடைய பங்களிப்புகள் இடம்பெறுகின்றன .

%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d

அதற்கு முன்பாகப் பேசிய மூத்த பத்திரிகையாளர் இராதேயன், 50வது ஆண்டு மலர் வெளியிடுவேன் என்ற துணிபுடன் வாழ்ந்த அவரது லட்சியம் அவரது இயலாமை இரண்டு வருடங்கள் முன்பாக 48வது ஆண்டு மலருடன் முடங்கிப் போனது துரதிஷ்டம். ஆயினும் மல்லிகை சிற்றிதழை மீளவும் கொண்டு வர ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d

தலைமையுரையில் தெணியான், ‘மல்லிகை’ இதழில் அதிகமாக எழுதியவரென நோக்கின் தெணியானாகவே இருக்கும். அதுவும் இல்லாமல் எனது ஆரம்ப கால நாவல்கள் இரண்டினை தமிழக நர்மதா போன்ற வெளியீட்டகங்களால் வெளியிட்டு வைத்தும் என்னை எழுத்துலகில் வளர்த்து விட்டவர் என நினைவு கூர்ந்தார்.

%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d

சுந்தரம் டிவகலால பேசுகையில், ஜீவாவுக்கு இந்நிகழ்வைச் செய்தவர்கள் யாரெனத் தெரியவில்லை. இதையும் விடப் பிரமாதமாக நிகழ்வை ஒழுங்கு செய்திருக்க வேண்டும். யாழ். மண்ணில் விதையூன்றிய மல்லிகை ஆசிரியர் கொழும்புவாசியாகி விட்டார். இன்று காலை வந்து வந்து இரவு கொழும்புக்கு ஓடிவிடும் நிலைமை தோழர் ஜீவாவுக்கு வந்து விட்டது எனக் கூறினார்.

பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா கூறுகையில், ஜீவா பல்கலைக்கழக நிகழ்வொன்றுக்கு வருகை தந்தபோது அவருடைய துவிச்சக்கர வண்டி காணாமல் போனது குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒன்று. இந்நிகழ்வில் பேசுவதற்காக வரவில்லை. இந்நிகழ்வு நடைபெறுவது தெரியாது. பேராசிரியர் சிவச்சந்திரன் தொலைபேசியில் கூறியதால் அவரைப் பார்த்து வாழ்த்தி விட்டுப்போக வந்தேன் என்றார்.

எழுத்தாளர்கள் அநாதரட்சகன், க.சட்டநாதன், கோகிலா மகேந்திரன், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், பேராசிரியர் இரா.சிவச்சந்திரன், டாக்டர் என்.கே.முருகானந்தன் இளைய தலைமுறை சீனா உதயகுமார், புலோலியூர் வேல்நந்தன் மேலும் பாலிய நண்பர், வாசகர்கள் நினைவலைகளை மீட்டுக் கொண்டனர். நிகழ்வை கவிஞர் மேமன்கவி ஒழுங்கமைத்தார். இளவாலை மணியம் நன்றியுரை வழங்கினார்.

Related posts

*

*

Top