நோய்களைக் கண்டறிகிறது ஜபிஎம் இன் Watson

Barack Obama

சிக்கலான மருத்துவ விடயங்களை தீர்ப்பதற்காக, ஜபிஎம் (IBM)இன் செயற்கை நுண்ணறிவு இயக்குதளமான வட்சன் (Watson) ஜேர்மனியிலுள்ள வைத்தியர்களுடன் பணியாற்றவுள்ளது.

ஜேர்மனியின் மர்பேர்க் நகரத்திலுள்ள பல்கலைக்கழக வைத்தியசாலையின், கண்டறியமுடியாத மற்றும் அரிதான நோய்களுக்கான நிலையத்திலேயே. ஜபிஎம்(IBM) இன் செயற்கை நுண்ணறிவு இயக்குதளமான Watson  நிலை கொண்டுள்ளது.

இதுவரையில், ஆறு விடயங்களை Watson பார்வையிடுள்ளபோதும், அதில் எத்தனையை, Watson சரியாக கணித்தது என்பது தெளிவில்லாமல் உள்ளது. தனியார் வைத்தியசாலைக் குழுமமான Rhon-Klinkum AG  உடனான Watson இன் இணைப்பானது, இந்த வருட இறுதியிலிருந்து சோதனை ரீதியாக ஆரம்பிக்கவுள்ளது.

பரந்த மருத்துவ அறிவுடன், நோயாளர்களின் மருத்துவக் கோப்புக்களை வாசிக்கும் Watson தொடர்ச்சியான ஆலோசனைகளை வழங்குகின்றது. மருத்துவத் துறையில், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ள நிலையில், கூகுளின் செயற்கை நுண்ணறிவான DeepMind ஐக்கிய இராச்சியத்திலுள்ள சில வைத்தியசாலைகளுடன் இணைந்துள்ளது.

நோயாளர்களின் தரவுகளை, தொழில்நுட்ப நிறுவனங்கள் கொண்டிருப்பது குறித்து சர்ச்சை காணப்படுகிறது. நோயாளர்களின் பதிவுகள் வழங்கப்பட முன்னர், நோயாளர்களிடமிருந்து மேலதிகமான தெளிவான ஒப்புதல் பெறப்பட வேண்டும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

*

*

Top