முன்பள்ளி மாணாக்கர்களுக்கு கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள்

அண்மையில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பளை வீமன்காம் தெற்கு பகுதியில் புதிதாக ஆரம்பித்த சிறுவர் முன்பள்ளியைச் சேர்ந்த 21 முன்பள்ளி மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் மற்றும்  விளையாட்டு உபகரணங்களை வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் கிராமஅபிவிருத்திசங்கம் தலைவர், செயலாளர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்டனர். பல வருடங்களாக முகாம்வாழ்வை அனுபவித்து தங்கள் சொந்த மண்ணில் மீள் குடியேறிய பளை வீமன்காம் தெற்கு பகுதி மக்கள் தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக ஏங்குகின்றனர்.

பிள்ளைகள் கல்வி கற்பதற்கு முன்பள்ளிகள், பாடசாலைகள் இல்லாதா காரணத்தால் கல்வியை தொடர்வதற்கு பெரும் சவால்களை எதிர் கொள்கிறார்கள். மேலும் தூர இடங்களுக்கு கல்வி கற்க செல்வதற்கும் போக்குவரத்து வசதி இல்லாத சூழல் காணப்படுகிறது.

Related posts

*

*

Top