மாணவர் படுகொலையை கண்டித்து முற்றுகை போராட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து யாழ்.பல்கலை மாணவர்கள் யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் வடமாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றுக்காலை 7.30 மணியில் இருந்து நண்பகல் 12.00 மணிவரை இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் யாழ்.பல்கலையின் மாணவர்கள்,கல்விசாரா ஊழியர்கள் உன சுமார் 2000 ற்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11.45 மணியளவில் அளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து மாணவர்கள் ‘பொலிஸாரின் அடாவடித்தனத்தால் யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யன்னட்டதை வண்மையாகக் கண்டிக்கிறோம் இழைக்கபபபட்ட அநீதிக்கு தீர்வை வேண்டி நிற்கிறோம்.’ வுhசகம் பொநிக்கப்பட்ட பதாகையை செயலகத்தின் வாயிலில் கட்டித் தொங்கவிட்டபடி இப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இப்போராட்டத்திலே மாணவர்கள் என்ன தெரு நாய்களா? தமிழரின் வாழ்விடங்களைத் திட்டமிட்டு அழிக்காதீ;hகள்,பக்கச்சார்பற்ற நீதி வேண்டும், பொலிஸாரே அடாவடித்தணங்களில் ஈடுபடாதீர்கள் காவல்த்துறையினரே காடையரைப்போல் நடக்காதீர்கள்,தேசிய பாதுகாப்பு மாணவர்களுக்கு இல்லையா?,திட்டமிட்ட இன அழிப்பினை நிறுத்து மனித உரிமைகள் மாணவர்களுக்கு இல்லையா? சுலோகங்கள் பொறிக்கப்பட்ட அட்டைகளை ஏந்தியவாறு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்றுக்காலை 7.30 மணியிலிருந்து யாழ்.நகரில் அமைந்துள்ள மாவட்ட செயலக வாயில்களுக்கு முன்னாலும், வடமாகாண ஆளுநர் செயலதக்திற்கு முன்னாலும் அமர்ந்து அமைதியான முறையில் இந்த போராட்டத்தை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் மழiயையும் பொருற்படுத்தாது ஏ9 வீதியை மறித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவிருந்த போதும் அரச நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நோக்கில் அரச செயலகம் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக யாழ்ப்பாண செயலகத்தின் பணியாளர்கள் யாழ்.மாவட்டச் செயலகத்துக்கும், வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கும் செல்ல முடியாத நிலையில் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் நண்பகல் 12 மணியளவில் பல்கலை. மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் நிறைவுக்கு வந்தது. மாணவர்கள் தமது கோரிக்கைகள் உள்ளிடங்கி மகஜரை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என் வேதநாயத்திடம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்குவதற்கான முறையில் கையளிக்கப்பட்டுள்ளது.

%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88 %e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88 %e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88 %e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88 %e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88

Related posts

*

*

Top