வட மாகாணத்தில் முழு கடையடைப்பு: யாழ்ப்பாணம் முடங்கியது

Barack Obama

யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் இருவர்  போலிசாரால் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதிகோரியும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்று முழுகடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால்  வடக்கு மாகாணத்தில் இயல்பு வாழ்க்கை முற்றாகச் செயலிழந்துள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், அரச மற்றும் தனியார் பேருந்துகளும் இயங்கவில்லை. யாழ்ப்பாணம் நகர் பகுதி முழுமையாக முடங்கியுள்ளது. மருந்தகங்கள் தவிர ஏனைய வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மாணவர் படுகொலை  கண்டிக்கும் வகையில் யாழ். மாவட்டத்தில் பூரண கடையடைப்பை அனுஷ்டிக்குமாறு அரசியல் கட்சிகள் நேற்று முன்தினம் கோரிக்கை முன்வைத்திருந்தன. இந்த கோரிக்கையின்படி, இன்றைய தினம் பூரண கடையடைப்பு அனுஷ்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

*

*

Top