ஆனைக்கோட்டையில் இனந்தெரியாதோர் தாக்குதல்

யாழ். ஆனைக்கோட்டைப் பகுதியில் இனந்தெரியாத சிலர் நடாத்திய தாக்குதலில் மூவர்காயமடைந்துள்ளதுடன் அவர்களின் மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று 25.10.2016  செவ்வாய்கிழமை இரவு 8:30 மணியளவில் ஆனைக்கோட்டை ஆலடி வைரவர் கோயில் பகுதியில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது…

யாழ். ஆணைக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் நேற்று  இரவு8.30 மணியளவில் இளைஞர்கள் சிலர் கூடி நின்றுள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் அங்கு பிக்கப் ரக வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த இளைஞர்கள் மீது சராமரியாக தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு வாள்களாலும் வெட்டியுள்ளனர். இதனால் இளைஞர்கள் அனைவரும் அங்கிருந்து சிதறி ஓடியுள்ளனர்.

மர்ம நபர்கள் அங்கிருந்து ஓடிய இளைஞர்களை மடக்கிப் பிடித்து அவர்களைத் தாக்கியதுடன் அவர்களின் மோட்டார் சைக்கிள்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து தாக்கப்பட்ட 3 இளைஞர்களும் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டடுள்ளனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவியதுடன் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கினர். இளைஞர்களை தாக்கியவர்கள் கொச்சை தமிழில் பேசியதாகவும் கூறப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

*

*

Top