‘கலைமுகம்’ சஞ்சிகையின் 60ஆவது இதழ் வெளியீடு

திருமறைக் கலாமன்றத்தின் வெளியீடான கலை இலக்கிய சமூக இதழான ‘கலைமுகம்’ இதழின் 60ஆவது பிரசுர வெளியீடு வெளிவந்துள்ளது. 

இவ்விதழில் சாந்தன், சி.ரமேஸ், தெளிவத்தை ஜோசப், கி.சித்திராதரன், மு.பொன்னம்பலம், ப.தெய்வீகன், அரங்கன் ஆகியோரின் கட்டுரைகளும் பி.எஸ்.அல்பிரட்டின் தொடர் கட்டுரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், அனார், சித்தாந்தன், வேலணையூர் தாஸ், கிரிஷாந், சு.க.சிந்துதாசன், கருணாகரன், வே.ஜ.வரதராஜன் ஆகியோரது கவிதைகள் மற்றும் ந.சத்தியபாலன், சோ.பத்மநாதன் ஆகியோரது மொழிபெயர்ப்பு கவிதைகளும் தாட்சாயிணி, க.சட்டநாதன், ,ராகவன், உடுவில் அரவிந்தன் ஆகியோர்களது சிறுகதைகளும் ஜி.ரி.கேதாரசாதனின் மொழிபெயர்ப்பு நேர்காணலும்  தி.செல்வமனோகரன், ப.ராஜதிலகன், ந.சத்தியபாலன், தரிசனன் ஆகியோரது நூல் மதிப்பீட்டுரையும் என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி காத்திரமான படைப்பாக வெளிவந்துள்ளது.

Related posts

*

*

Top