‘வட்ஸ் அப்’ செயலில் புதிய வசதி அறிமுகம்

சமூக வலைதளங்களில் குறுந்தகவல் மற்றும் தொலைபேசி உரையாடலுக்கு ‘வட்ஸ் அப்’ செயலி பிரபலமானதாக விளங்குகின்றது. இதன் பாவணையாளர்களின் எண்ணிக்கை உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

‘வட்ஸ் அப்’ பில் இது நாள் வரை ஓடியோ தொலைபேசி அழைப்பு வசதி மட்டுமே இருந்து வந்த நிலையில் அண்டராய்ட் இயங்குதளத்தில் ‘வட்ஸ் அப்’ பை பயன்படுத்துபவர்களுக்கு வீடியோ தொலைபேசி அழைப்பு வசதியை தற்போது உத்தியோகபூர்வமாக அந்த நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது.

எனினும் குறித்த வசதியானது ‘வட்ஸ் அப் பீட்டா’ பயனாளிகளுக்கு மட்டுமே தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோ தொலைபேசி வசதியானது எதிர்காலத்தில் எல்லா வித வாடிக்கையாளர்களும் பயன்படுத்தும் வகையில் வெளிவருமா என்பதை பற்றி அந்நிறுவனம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்படத்தக்கது.

Related posts

*

*

Top