சிறப்புற இடம்பெற்ற நீர்வேலி ‘சுடர்’ கல்வி நிறுவனத்தின் பரிசளிப்பு விழா

நீர்வேலி ‘சுடர்’ கல்வி நிறுவனத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவுப் பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வுகளும் நேற்று 29.10.2016 சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நிறுவன வளாகத்தில் இடம்பெற்றன.

சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆசிரியரும் நிறுவன இயக்குநருமாகிய நா.சசிகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசனும் சிறப்பு விருந்தினர்களாக நீர்வேலி றோ.க.த.க. பாடசாலை அதிபர் சி.தர்மரட்ணம், அமலமரித் தியாகிகள் சபையின் லெபறா அமைப்பின் இணைப்பாளர் பே.றொனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் ஆசியுரைகளை நீர்வேலி காளி அம்பாள் தேவஸ்தானப் பிரதம குரு சிவஸ்ரீ ப.சண்முகராஜக் குருக்கள், நீர்வேலி பரலோகமாதா கோவில் குரு அருட்பணி ம.பத்திநாதன் அடிகள் ஆகியோர் நிகழ்த்தினர்.

நிகழ்வில் இனிய விருந்தினர்களாக முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் இ.குணநாதன், கோப்பாய் ஆசிரிய கலாசாலை சிரேஷ்ட விரிவுரையாளர் பொ.சற்குணநாதன், தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகள் பல இடம்பெற்றன. பெற்றோர் ஆர்வலர் எனப் பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5

Related posts

*

*

Top