யாழ்.பல்கலை கற்றல் மற்றும் நிர்வாக செயற்பாடுகள் முடக்கம்

Barack Obama

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தமைக்கு நீதி கோரி யாழ் பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் இன்று 31.10.2016 திங்கள்கிழமை காலை முதல் அனைத்து நிர்வாக செயற்பாடுகளும் முடக்கப்பட்டன.

ஆத்துடன் நிர்வாக ஊழியர்கள் பல்கலைக்கழகத்திற்குள் செல்ல முடியாதவாறு வாயிற் கதவுகளும் மூடப்பட்டுள்ளன. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் இருவர் கடந்த 21 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு பொலிசாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.

மாணவர்களின் உயிரிழப்புச்சம்பவம் நடைபெற்ற பின்னர், அனைத்துப் பீடங்களின் கல்வி சார் செயற்பாடுகளை மாணவர்கள் பகிஸ்கரிப்புச் செய்திருந்தனர். இருந்தபோதிலும் கல்விசார ஊழியர்கள் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தவொரு அரச அதிகாரிகளும் தம்மை அழைத்து கருத்துக்களை கேட்டறிந்து கொள்ளவில்லையெனவும் மாணவர்கள் ஆதங்கம் வெளியிட்டிருந்தனர்.

இதனையடுத்து கற்றல் மற்றும் நிர்வாக செயற்பாடுகள் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று திங்கட்கிழமை தொடக்கம் முடக்கப்பட்டன. இதேவேளை நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள் ஒன்றியம் மற்றும் பீடாதிபதிகளை இன்று காலை 10 மணிக்கு சந்தித்து கலந்துரையாடினார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யும் ஜனாதிபதி உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Related posts

*

*

Top