சிலவகை கைபேசிகளுக்கு வாட்ஸ்அப் சேவை இடைநிறுத்தம்

Barack Obama

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் ஒரு சில கையடக்க தொலைபேசிகளுக்கு வாட்ஸ்அப் சேவையினை பெற்றுக் கொள்ள முடியாது என வாட்ஸ்அப் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதற்கமைய சிம்பியன் ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட தொலைபேசிகள், நோக்கியா எஸ் 40, நோக்கியா எஸ் 60, பிளாக்பெரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெரி 10, ஆன்டிரொய்ட் வெர்சன் 2.1 மற்றும் 2.2, வின்டோஸ் போன் 7.1, ஆப்பிள் ஐபோன் 3 ஜிஎஸ், ஐஓஎஸ் 6 ஆகிய தொலைபேசிகளில் தான் வாட்ஸ்அப் சேவை டிசம்பர் 31க்கு பிறகு நிறுத்தப்படவுள்ளளது.

‘இந்த வகை தொலைபேசிகள் எங்களுக்கு முக்கியம் என்றாலும், எதிர்கால சேவைக்கு இந்த வகை தொலைபேசிகளில் தொழில்நுட்ப வசதியில்லை. எனவே இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டியுள்ளது. எனவே, தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் தொடர்பு கொள்ள வேறு தொலைபேசி வகைக்கு மாறுங்கள். அப்போதுதான் இந்த சேவையை தொடர்ந்து பெற முடியும்’ என தனது இணையப் பக்கத்தில்  வாட்ஸ்அப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

*

*

Top