ட்ரம்ப் என்னும் அரசியல் கில்லாடி

– கனடாவிலிருந்து எஸ். ராஜகோபாலன்

மெரிக்காவின் அடுத்த (45 ஆவது) சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டானால்ட் ட்ரம்ப் என்ற பிலியன் டாலர் அதிபதியை ஆரம்பத்திலிருந்தே எல்லாரும் அரசியல் மேடையில் கிள்ளுக் கீரையாகவே மதிப்பிட்டு வந்தனர். ஆனால் நடந்தது என்னவெனில்இ அமெரிக்க வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறான இவரின் சனாதிபதித் தேர்தல் பிரசாரத்தைத் தொடர்ந்து இவர்கள்எல்லாருக்கும் பெரும் அதிர்ச்சியைத் தரும் இன்றைய வெற்றியை ஈட்டிக்கொண்டார்.

Rajagobalanஇவ்வளவுக்கும் ட்ரம்ப் ஒரு யோக்கியனல்ல, பரம அயோக்கியனுமல்ல. திடீரென்று அரசியல்வாதியாகத் தன்னை அலங்கரித்துக்கொண்ட அமெரிக்காவின் இன்னொரு தில்லு முல்லு வியாபாரி. இவர் கை பட்டதெல்லாம் துலங்கியதுமுண்டு தொலைந்துபோனதும் உண்டு.

இவரின் கட்டுமானங்களுக்கு வேலை செய்த தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகள் பல காலமாக நிலுவையிலிருக்கின்றன; வழக்கறிஞர்களுக்கு அனுப்பிய காசோலைகள் திரும்பி வந்துவிட்டன; கணக்காளர்கள் முறையாகக் கணக்கு வைக்கவில்லையென்ற குற்றச்சாட்டின்மீது வெறும் கையோடு திருப்பி அனுப்பப்பட்டார்கள். இன்னும் எந்தெந்த வழிகளில் கொடுக்குமதியாளர்கள் ஏமாற்றப்படமுடியுமோ அந்த வழிகளையெல்லாம் வெற்றிகரமாகக் கைவரப்பெற்றவராயிருந்தார் ட்ரம்ப்.

இப்படியான பின்புலத்தில் இவரின் அரசியல் பயணமும் சனாதிபதியாகும் கனவும் எப்படிக் களைகட்டின?

அமெரிக்காவின் சாதாரண பிரசைகளிடம் ஒபாமா அரசின் மீதான வயிற்றெரிச்சலையும் கோபத்தையும் ஆரம்பத்திலேயே கிளப்பிவிட்டார். நிகழ்காலத்தின் மீது அவர்களிடமிருந்த அவநம்பிக்கையையும்எதிர்காலம் குறித்த அச்சத்தையும் வேளையோடு தனக்குச் சாதகமாக்கிக்கொண்டார். அவர்கள் அனுபவித்த மன நோவையும் உளைச்சலையும் கடுமையாக உழைத்தும் மோசமாகப் பின்தங்கிப்போன அவர்களின் குடும்ப நிலைமையையும் போகுமிடமெல்லாம் அவர் உரத்துப் பேசத் தவறவில்லை.

அமெரிக்காவின் பட்டி தொட்டிகளிலெல்லாம் தன்னை அம்மக்களின் நலனுக்காகப் போராட வந்த தூதுவனாகக் கற்பிதம் செய்யும் வகையில் நாட்டில்அரசியல் வல்லுனர்கள் நாடகமாடியஅத்தனை அரசியல் மகாநாடுகளின் மணிக்குடலையும் அறுத்து மாலையாகப் போட்டுக்கொண்டார்.

ட்ரம்ப் சீமான் தனது நேரடித்தொலைக்காட்சிகளில் காட்டிய ஆர்ப்பாட்டங்களும் கொச்சையான சொல்லாடல்களும்இ அமெரிக்க சமூகத்தின் நீண்டகால அங்கங்களான லத்தீன் இனத்தவர்இ ஆபிரிக்க அமெரிக்கர்கள் (கறுப்பின மக்கள்)இ போரில் தமது உயிரைத் தியாகம் செய்தோர் குடும்பங்கள்இ பெண்கள்இ முஸ்லிம்கள்இ உடல் ஊனமுள்ளவர்கள் என்போர் போன்ற ஒவ்வொரு மக்கட்குழுவின் மீதும்வீசியபொய்களும் அவதூறுகளும் நிரம்பியபேச்சும் ட்ரம்ப் இந்த நாட்டின் மிக உந்நதமான சனாதிபதிப் பதவியில் அமரத் தகுதியற்றவராக்கின என்றுஅரசியல் விற்பன்னர்கள் எண்ணினார்கள்.

ம்ஹூம்இ அதை மக்கள் ஏற்கவேயில்லை.

அதற்குப் பதிலாக ட்ரம்ப் 1960 இல் புகழ்பெற்ற சொல்லாடலான ‘அமைதிப் பெரும்பான்மை’ என்னும் நவீனத்துவ எழுச்சிக்குத் தனியொருவராகத் தலைமை தாங்கினார்.

அமெரிக்க மக்கள் மாற்றம் என்ற பசிக்குள்ளாகியிருக்கிறார்கள்இ ஆகவே தான் மட்டுமே தனியனாய் வாஷிங்டனில் நிலைகொண்டுள்ள ஒபாமா ஆட்சியில் ஊடுருவியுள்ள ஊழலை அகற்றி இந்தச் சதுப்பு நிலத்தைத் தூர் வாரத் தகுதியுள்ளவர் என வெற்றிகரமாக வாதாடினார்.

அரசியல் விதிகளைத் திருப்பி எழுதுவதன் மூலம் அனைத்துலகக் கிளர்ச்சியையும் நிச்சயமின்மையையும் ட்ரம்ப் உருவாக்கிக்கொள்வாரென்று அமெரிக்க நட்பு நாடுகளும் வெளி நாட்டுச் சந்தைகளும்இ அவரின் பிரசாரத்தின்போது மேற்கொண்ட நடத்தையால் வெறுப்படைந்த அமெரிக்கர்களும் உலகின் எதிர்காலம்பற்றிப் பதட்டம் அடைந்தார்கள் என்பதும் உண்மை.

எது எப்படியிருப்பினும்இ ட்ரம்ப் தான் யாரென்பதைத் தெட்டத் தெளிவாக மக்கள் முன்னால் சொல்லிக்கொண்டார். ஆபாச நடத்தைகளாலும் வரம்பு மீறிய அங்கத் தொடுகைகளாலும் ட்ரம்ப் தம்மை மானபங்கப் படுத்தினாரென்று நேரடியாகவும் வலைத் தளங்கள்இ ஊடகம் மூலமாகவும் குற்றம் சாட்டிய பன்னிரண்டு பெண்களின் கூற்றுகள் அத்தனையும் பச்சைப் பொய்யென்று தலை நிமிர்த்திச் சொன்னார். இவர்களின் குரலை இன்னும் பெரிதாக எதிரொலிக்கச் செய்த ஹிலாரி க்ளின்டனின் பருப்பும் சாதாரண அமெரிக்க மக்களிடம் அவியவில்லை.

ட்ரம்ப் அமெரிக்க மக்களுக்குக் கொடுத்த வாக்குதிகளில் சில:

தெற்கு எல்லையில் சுவரெழுப்பி மெக்ஸிகோவின் சட்டவிரோதக் குடியிருப்பாளர்களையும் போதை வஸ்துக் கடத்தல்காரர்களையும் தடுப்பேன்; இந்தச் சுவரின் கட்டுமானத்துக்கு வேண்டிய செலவை அவர்களே பொறுப்பெடுக்கும்படி செய்வேன். (இது நடவாத காரியம் என்று மெக்ஸிகோ அதிபர் ஏற்கனவே பலத்துச் சொல்லிவிட்டார்.)

உற்பத்திப் பொருட்களையெல்லாம் உள் நாட்டில் தயார் செய்து அமெரிக்க மக்களின் வேலை வாய்ப்பை மேம்படச் செய்வேன்.

முஸ்லிம்கள் அமெரிக்க எல்லைகளினூடாக் ஊடுருவதைத் தடை செய்வேன்.

ழுடியஅயஊயசந என அழைக்கப்படும் ஒபாமாவின் உடல் நலச் சட்டத்தை ஒழித்துப் புதிதாக ஒன்றை அமுல் செய்வேன்.

ஹிலாரிக்கு எதிராக வழக்குத் தொடுப்பேன். மேலும்

உயர் நீதிமன்ற நீதியரசர்களை நானே தெரிவு செய்வேன்.

இவ்வாறு மொத்தமாய்க் கிட்டத்தட்ட 76 தேர்தல் வாக்குறுதிகளை ட்ரம்ப் இதுவரை கொடுத்திருக்கிறார். இவற்றில் ஒன்றாவது காப்பாற்றப்படுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எதிர்வரும் ஜனவரியில் உலகின் மிகப் பலம் கொண்ட மனிதராக உருவாகும்போதுஇ ட்ரம்ப் அமெரிக்க சனாதிபதித் தேர்தலின் விதிகளைத் திருப்பி எழுதியதைப் போலவேஇஅமெரிக்க அரசின் விதிகளையும் பாரம்பரியங்களையும் அனைத்துலக ஒழுங்குமுறைகளையும் திருப்பி எழுதக்கூடும் என்ற சந்தேகம் உலகத்தோரின் மனதில் எழுந்துள்ளது.

இத்தேர்தலில் ஹிலாரி க்ளின்டனுக்கு அமோக வெற்றி நிச்சயமென அரசியல் ஜாம்பவான்கள் ஆரூடம் சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால் தேர்தல் முடிவுகள் இன்னும் இறுகிவந்தபோது அது மிக ஆழமாகப் பிரிவுற்றிருந்த அமெரிக்க மனதின் பிரதிபலிப்பாகவே அமைந்தன.

ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குப் போகும் ஒடுங்கிய பாதையில் வெற்றிகரமாகப் பயணிப்பாரென்று கடந்த வார இறுதியின் கடைசி வேளையில் வெளிவந்த கருத்துக் கண்காணிப்புகள் பறை முழங்கத் தொடங்கிவிட்டன. ஹிலாரி க்ளின்டனின் அரசியல் சவப்பெட்டிக்கு அடிக்கும் இறுதி ஆணியும் தயாராகி விட்டது.

இதை எழுதிக்கொண்டிருக்கும் இரவு 9 மணியளவில் (ரொராண்டோ நேரம்) நியூ யார்க், சிகாகோ, சியாடில் உட்படக் குறைந்தது 7 பிரதான அமெரிக்க நகரங்களில் ட்ரம்பின் சனாதிபதித் தெரிவை எதிர்த்துப் பல்லாயிரக் கணக்கானோர் ஊர்வலங்களை மேற்கொண்டிருக்கிறார்கள்.

‘நிறுத்துங்கள் ரானால்ட் ட்ரம்பை, இவன் எங்கள் சனாதிபதியல்லன்’ என்ற வாசகம் கொண்ட பதாதைகளை ஏந்தியபடி பெரும்பாலும் இளம் சமுதாயத்தினர் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் பங்கு கொண்டிருக்கிறார்கள்.

பொன் கொழிக்கும் அமெரிக்காவில் இனி என்ன நடக்கப்போகிறது? உலகத்தின் கண்களெல்லாம் இங்கேதான் பதிந்திருக்கின்றன.

Related posts

*

*

Top