மரியசேவியர் அடிகளுக்கு நல்லிணக்கத்துக்கான மீயுயர்விருது

Barack Obama

கெயார் சர்வதேச நிறுவனம், GIZ, மற்றும் ‘தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகம் (ONUR) என்பவை இணைந்து மேற்கொண்ட VINGS கலைப்பெரு விழாவின் இறுதி நிகழ்வு கடந்த 13.11.2016 அன்று கொழும்பு BMICH இல் இடம்பெற்றது.

நிறைவு விழாவில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக பல தசாப்த காலங்களாக இலங்கை கலைத்துறையில் ஆற்றிய கெளரவமான பணியைப் பாராட்டி இலங்கை சோசலிச குடியரசின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திருமறைக் கலாமன்றத்தின் தாபகரும் இயக்குநருமான அருட்கலாநிதி நீ.மரியசேவியர் அடிகளாருக்கு ‘நல்லிணக்கத்துக்கான மீயுயர்விருது’ வழங்கப்பட்டது.

கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாக அரங்கத்துறையிலும், கலை இலக்கியத்துறைகளிலும் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டதுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சமாதானத்துக்கும் இன நல்லுறவுக்குமான பாரிய முயற்சிகளை அரங்கினுாடாகவும், கலை இலக்கியமுயற்சிகள் மற்றும் கலைப்பாலங்களி னுாடாகவும் மேற்கொண்டு வருகின்ற பல்கலைப்பேராளுமை மிக்க நீ.மரியசேவியர் அடிகளுக்கு இவ்விருது கிடைத்திருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.

Related posts

*

*

Top