கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை

“உதவும் இதயங்கள்” நிறுவனத்தின் அனுசரணையில் முல்லைத்தீவு பாடசாலைகளில் கா.பொ.த சாதாரண தர மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

முல்லை / சிலாவத்தை வித்தியாலயத்தில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் கொக்குளாய் அ.த.க பாடசாலை, கொக்குத்தொடுவாய் அ.த.க பாடசாலை, செம்மலை மகா வித்தியாலயம், அலம்பில் மகா வித்தியாலயம், உடுப்புக்குளம் வித்தியாலயம், குமுழமுனை மகா வித்தியாலயம், சிலாவத்தை தமிழ் வித்தியாலயம், முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்கப் பாடசாலை, முல்லைத்தீவு மகா வித்தியாலயம் ஆகிய பாடசைலைகளைச் சேர்ந்த 165 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடங்களில் பயிற்சிகள் நடைபெற்றது. இதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கா.பொ.த சாதாரண தரம் பரீட்சையில் சித்தியடைவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இந் நிகழ்வில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

%e0%ae%95%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8a-%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%af %e0%ae%95%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8a-%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%af %e0%ae%95%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8a-%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%af %e0%ae%95%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8a-%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%af

Related posts

*

*

Top