குடல் அழற்சி நோய்: அறிகுறிகளும் சிகிச்சைகளும்

– டொக்டர் எம். குணசேகரன் M.S.,

குழந்தைகளின் வளர்ச்சியில் ஆறாவது மாதம் தொடங்கியதும் அவர்களை பெற்றோர்கள் அதிகளவில் கண்காணிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் புரண்டு படுத்து எழுந்து தவழ்வதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். இந்த சமயத்தில் அவர்களின் வயிற்றுப்பகுதி தரையில் அழுந்தத் தொடங்கும். ஒரு சில குழந்தைகளுக்கு இந்த நேரத்தில் வயிற்றுப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு குடல் அழற்சி நோய் என்கிற அப்பெண்டிசிட்டிஸ் வரக்கூடும். இது 6 மாத குழந்தைத் தொடங்கி 60 வயது முதியவர்களுக்கு கூட வரலாம்.

இதற்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவர்களிடம் சென்று தக்க ஆலோசனையைப் பெறவேண்டும். அலட்சியப்படுத்தினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு அடிவயிறு முழுவதும் தொற்றுக்கிருமிகள் அதிகமாகி ஆபத்தைத் தோற்றுவித்துவிடும். இதற்கான அறிகுறியைப் பற்றி அறிந்துகொள்ளும் முன் அப்பெண்டிசிட்டிஸ் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். சிறு குடலிலோ அல்லது பெருங்குடலிலோ தேவையில்லாமல் வளரும் சதைப்பகுதியே அப்பெண்டிசிட்டிஸ். இது அப்பகுதியில் சிறு விரல் போல் துருத்திக்கொண்டிருக்கும். இதனால் பல சிக்கல்கள் உருவாகும்.

குழந்தைகளுக்கு இதற்கான அறிகுறி வெளிப்படையாகத் தெரியும். அது தெரிந்தவுடன் உடனே மருத்துவரிடம் காண்பித்துஇ மருந்து மாத்திரைகள் மூலம் அதனை குணப்படுத்திட வேண்டும். இரண்டு வயது குழந்தைக்கும் இது வரக்கூடும். இதற்கான காரணம் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை என்றாலும்இ கழிவுகள் காரணமாகத்தான் இது உருவாகிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். உடலில் தேங்கும் ஒரு வகையான கழிவுகள் தான் அப்பகுதியில் சதைப் பற்றை வளர்க்கிறது என்பதை நிபுணர் கண்டறிந்து தெரிவித்திருக்கிறார்கள்.

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் வராது என்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு இது வரக்கூடும். தொப்புளைச் சுற்றியுள்ள பகுதியில் வலி, அதன் பிறகு அதன் கீழ் பகுதியில் பரவும் வலி போன்ற அறிகுறிகள் தெரிந்தவுடனே மருத்துவரிடம் சென்றுவிட வேண்டும்.

ஒரு சிலருக்கு வலியுடன் கூடிய வாந்தி வரும், காய்ச்சல் இருக்கும். பசியெடுக்காது. அதையும் மீறி சாப்பிட்டால் மலசிக்கல் உருவாகும். படுக்கையை விட்டு குழந்தைகள் எழுந்திருக்காது. ஒரு பக்கமாக சாய்வாக நடப்பார்கள் இப்படியெல்லாம் இருந்தால் கண்டிப்பாக உடனடியாக மருத்துவரிம் காண்பிக்க வேண்டும்.

இதற்கென விசேட பரிசோதனை என்று எதுவும் இல்லையென்றாலும. இரத்தம் மற்றும் சிறுநீர் சோதனை மூலம் இதனை மருத்துவர்கள் உறுதி செய்வர். சிகிச்சையில் முதலில் மருந்துகளும், மாத்திரைகளும் தான் வழங்கப்படும். அதற்கு கட்டுப்படவில்லை என்றால் மட்டுமே குழந்தையின் வயது மற்றும் நோயின் தீவிரத்தன்மை ஆகியவைற்றையும் உறுதி செய்து கொண்ட பின்னரே அவர்களுக்கு மட்டும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஒரு சிலருக்கு சத்திர சிகிச்சைக்கு பின்னர் காய்ச்சல் வரக்கூடும். அது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தால் அதனையும் குணப்படுத்திடலாம்.

தற்போது இவ்வித சத்திர சிகிச்சை லேப்ராஸ்கோப்பிக் மூலம் துல்லியமாக மேற்கொள்ளப்படுகிறது. இதனை வராமல் தடுக்கவேண்டும் எனில் உணவு முறையில் ஒரு சீரான பழக்கத்தை கடைபிடிக்கவேண்டும். அதிக நார்சத்து உள்ள உணவுகளை சாப்பிடும் குழந்தைகளுக்கு இந்தநோய் பாதிப்பு வருவதில்லை.

Related posts

*

*

Top