பேஸ்புக்குக்கு தரவு வழங்குவதை இடைநிறுத்தியது வட்ஸ்அப்

Barack Obama

தகவல் பாதுகாப்புத் தொடர்பாக ஐரோப்பாவில் ஏற்பட்ட கரிசனைகளுக்கு பதிலளிக்கும் முகமாக, விளம்பர இலக்கு வைப்புக்காக, ஐரோப்பாவிலுள்ள பயனர்கள் பற்றிய தகவல்களை தனது தாய் நிறுவனமான பேஸ்புக்குக்கு வழங்குவதை WhatsApp இடைநிறுத்தியுள்ளதாக கடந்த 15.11.2016 செவ்வாய்க்கிழமை  தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவிலுள்ள அதிகாரிகளுடன் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, spam  தொடர்பான கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு போன்ற நோக்கங்களுக்காக மட்டுமே WhatsApp பயனர்களின் தரவைப் பயன்படுத்த WhatsApp நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக மேற்குறிப்பிட்ட தகவல் மூலம் தெரிவித்தது.

இவ் இடைநிறுத்தமானது தகவல் பாதுகாப்புத் தொடர்பான கரிசனைகளை ஒழுங்குபடுத்துநர்கள் பகிர்ந்து கொள்வதற்கு நேரத்தை வழங்குவதுடன் குறித்த விடயத்தை எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பாக தீர்மானிபதற்கான சந்தர்ப்பத்தை பேஸ்புக்குக்கு வழங்குகிறது.

பேஸ்புக்,  வட்ஸ்அப் இலிருந்து தரவுகளைப் பெறுவதை, தகவல் பாதுகாப்பு கரிசனையைக் காரணங்காட்டி, இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் ஜேர்மனிய தரவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நிறுத்தியிருந்மை குறிப்பிடத்தகது.

Related posts

*

*

Top