க.பொ.த பரீட்சையை முன்னிட்டு விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகிறது.

மேல் மாகாணத்தில் கூடுதலாக டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதால் பரீட்சை நிலையங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை இடம் பெறவுள்ள நிலையங்களை சூழவுள்ள பகுதிகளில் டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக புகை விசுறும் நடவடிக்கைகளை கல்வி அமைச்சின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டுள்தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சகல பிராந்திய சுகாதாரப் பிரிவுகளையும் தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் 2016ஆம் ஆண்டு, அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் பதிவாகக்கூடிய ஒரு ஆண்டாக காணப்படுவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

Related posts

*

*

Top