யாழ் மண்ணில் சிறப்புற இடம்பெற்ற ஆறுமுகநாவலர் மாநாடு

– ச.லலீசன்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முப்பது ஆண்டுகள் நிறைவை ஒட்டி நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் கடந்த நான்கு நாட்கள் நடத்தப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு இனிதே நிறைவுற்றது. அமைச்சின் வழிகாட்டல், ஆதரவு என்பன இருந்தாலும் திணைக்களப் பணிப்பாளர் திரு.அ.உமாமகேஸ்வரனும் அவருடன் இணைந்து பணியாற்றும் உத்தியோகத்தர்களும் சேர்ந்து இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பணியை நிறைவேற்றியிருக்கின்றனர். மீண்டும் நாவலர் பெருமை யாழ் மண்ணில் முன்னிலைப்படுத்தப்படுவது குறித்து தமிழ்மீதும் சைவம் மீதும் நம்பிக்கை கொண்டுள்ள நன்றியுணர்வுள்ள சமூகத்தினர் மகிழ்வடைவர்.

தமிழும் சைவமும் இன்றும் வாழ்வதற்கு நாவலரது பங்கும் பணியுமே பிரதான காரணம் என்பதை யாரும் மறுக்கார். எமது உணர்வு, உரிமை எனக் குரல் கொடுத்தோருள் முதற்போராளி நாவலரே. தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார். புலிகள் அதனை சர்வேச மட்டத்திற்கு எடுத்துச் சென்றனர். தேசியம் பற்றிய சிந்தனைகளுக்கு நாவலரது சிந்தனை அடிப்படையானதாகும்.

%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81 %e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81 %e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81
இந்துக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து விழா ஒன்றை நடத்துவது இலேசான காரியமல்ல. முதல் மூன்று நாட்களும் அடைமழையைக்கூடப் பொருட்படுத்தாது காலை மாலை என மண்டபம் நிறைந்த அளவிலும் நிறைவுநாள் ஓரளவிலும் மக்கள் விழாவில் பங்கேற்றனர். அகில இலங்கை இந்து மாமன்றம், நாவலர் சபை, நாவலர் நற்பணி மன்றம், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் என முன்னணி அமைப்புக்களின் பங்கேற்புடன்தான் திணைக்களத்தால் இத்தகைய வெற்றியைப் பெற முடிந்திருக்கின்றது.

தமிழகத்தில் இருந்து பேரூர் ஆதினத்தின் இளையபட்டம் தவத்திரு மருதாசலம் அடிகளார், திருமுறை ஓதுவார் கலாநிதி திருத்தணி சுவாமிநாதன், சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை தலைவர் டாக்டர் எஸ். அருள்மொழிச்செல்வன் மற்றும் சிதம்பரம் நாவலர் பாடசாலையுடன் தொடர்புடைய பேராளர்கள் என பலர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81 %e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81 %e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81

மாநாட்டின் போது ஆறுமுகநாவலருடன் தொடர்புடைய பத்திற்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டமை ஒரு சாதனை எனலாம். முதல்நாள் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த வித்துவான் கா. மாயாண்டி எழுதிய நாவலர் பெருமான் என்ற நூலும் இரண்டாம் நாள் விழாவில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் பாலபாடக் கதைகள், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் நீதி வாக்கியங்கள், ஆறுமுகநாவலர் எழுதிய பாடல்களின் தொகுப்பாக அமைந்த ஆறுமுகநாவலர் கவித்திரட்டு, நல்லைநகர் நாவலர் சைவத்தின் காவலர் ஆகிய நூல்களும் மற்றும் கலாநிதி ஆறு.திருமருகன் ஆக்கிய சைவத்தமிழர்களின் கலங்கரை விளக்கம் என்ற நூலும் மூன்றாம் நாள் விழாவில் திருவாசகம் சிங்கள மொழிபெயர்ப்பு, பாலபாடம் முதலாம் இரண்டாம் புத்தகங்கள், மூன்றாம் நான்காம் புத்தகங்கள், க.பொ. இரத்தினம் வெளியிட்ட நாவலர் நினைவு மலரின் மீள்பதிப்பு, Arumuga Naavalar by V.Muttukumaraswamy,  ஆறுமுகநாவலர் சரிதம், நாவலர் நறுமலர் என்ற பெயரில் அமைந்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாட்டுச் சிறப்பு மலர், நாவலர் நூற்;றாண்டு மலர் (மீள்பதிப்பு) ஆகிய நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன. கடந்த காலங்களில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலருக்கு முன்னெடுக்கப்பட்ட விழாக்களில் இந்த அளவிற்கு நூல் வெளியீடுகள் இடம்பெற்றது கிடையாது.

நான்கு நாள் விழாக்களிலும் மேடையில் ஆற்றுகை செய்த யாவருக்கும் நாவலர் திருவுருவப்படம் ஒன்றை விலையுயர்ந்த பிறேம் இட்டு வழங்கியமையும் பாராட்டுதற்குரியது. நாவலர் விழாவின் நினைவாக அவர்தம் வாழ்விடங்களில் நாவலர் திருவுருக்கொள்வார்.

%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81 %e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81 %e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81

நாவலர் வெளியிட்ட நூல்களாக 84 நூல்களை நாவலர் மாநாட்டு மலர் (1969) அடையாளப்படுத்தியிருக்கின்றது. இவற்றுள் சில நூல்களின் பிடிஎப் பிரதிகளையே இணையத்தில் இலவசமாகப் பெறமுடிகின்றது. இன்னும் ஒரு சில நூல்களை கூகுள் பிளே ஸ்ரோரில் (Google Play Store) ஏற்றி வியாபாரம் செய்யும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பாரதியின் நூல்கள் மற்றும் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் போன்ற பெரியாரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதைப் போன்று நாவலரின் நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டு இணையத்தில் இலவசமாகப் பெறக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தப்பணியையும் முன்னெடுக்கக்கூடிய ஆளுமையும் தகுதியும் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரிடமே உள்ளது என நினைக்கின்றேன்.

நான்கு நாட்கள் இடம்பெற்ற மாநாடு நாவலர் பற்றிய விழிப்புணர்வைப் பலரிடையே விதைத்திருக்கின்றது. இன்று சைவம் எதிர்கொள்ளும் மதமாற்றம் தொடர்பான பிரச்சினைகள் தொடக்கம் அரசியலில் சமயத்தலைவர்கள் ஈடுபாடுகொள்ளாதிருக்கின்ற குறைபாடுகள் வரை பட்டவர்த்தனமாகப் பேசப்பட்டிருக்கின்றன. இந்த மண்ணில் சைவம் வாழும்போதுதான் தமிழ் செழித்தோங்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஏனெனில் மொழியும் சமயமும் இங்குள்ள பெரும்பாலானோருடைய உணர்வில் இயல்பாகவே கலந்துள்ளன. எனவே தமிழ் வாழ வேண்டுமாயின் சைவம் வாழ வேண்டும் என்பது யதார்த்தமானது. அதற்காக ஏனைய சமயங்கள் வாழக்கூடாது என்பது இதன் கருத்தல்ல. அவை தமது தளத்தில் தமிழையும் தம்மையும் அடையாளப்படுத்தட்டும். சைவர்களைக் குறிவைத்து அவர்களைத் தம்பக்கம் இழுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதுதான் வேதனைக்குரியது.

%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81 %e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81 %e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81

விழாவிற்கான அழைப்பிதழ் தயாரிப்பு திணைக்களத்தாரது திட்டமிடலைப் பறைசாற்றி நிற்கின்றது. ஆயினும் அதனை அமுல்படுத்துவதில் விழா ஏற்பாட்டாளர்கள் தளர்ச்சியுற்றனர் என்பது சற்றுக் கசப்பான உண்மை. நேரம் குறித்து அழைப்பிதழ் நிகழ்வுகள் அச்சடிக்கப்பட்டிருந்ததாயினும் ஒலிவாங்கி முன்நின்ற பேராளர்களில் சிலர் நேரம் பற்றி எவ்வித கவலையும் இல்லாமல் உரையாற்றியமை கண்டிக்கத்தக்கது. என்னருகில் இருந்த இளைஞர் ஒருவர் நேரம் பொருத்தப்பட்ட மைக்கைக் கண்டுபிடிக்கமாட்டார்களா என ஆதங்கப்பட்டமையும் அவரது சிந்தனை விரிகையை எனக்குச் சுட்டியது. பேசியவர்களில் கணிசமானோர் அரைத்தமாவையே மீளமீள அரைப்பதாகப் பிறப்பு – பணி – இறப்பு எனப் பேசிக் கொன்றனர்.

%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81 %e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81 %e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81

நம்மண்ணில் பெரும்பாலான இந்து அமைப்புக்களால் நேரம் பற்றிய பிரக்ஞையுடன் விழாக்களை முன்னெடுக்க முடியாதிருக்கின்றமை ஆரோக்கியமானதல்ல. ஆயினும் சிறப்புற இடம்பெற்ற விழாவிற்குத் திருஷ்டிக் கழிப்பாக இந்த விடயத்தைக் கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

நாவலர் பற்றிய எழுச்சியை மீண்டும் நம்மண்ணில் தொடக்கிவைத்த நிகழ்வாக இந்த மாநாட்டை அடையாளப்படுத்தலாம்.

%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81 %e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81 %e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81 %e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81 %e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81

*

*

Top