2017 மிகவும் எதிர்பார்ப்புள்ள ஆண்டாகும்

‘நாம் தற்பொழுது இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியை கடந்துச் செல்கின்றோம். இன்னும் ஒரு சில நாட்களில் புத்தாண்டு மலரவுள்ளது. அது மிகவும் எதிர்பார்ப்புள்ள ஆண்டாகும். எதிர்வரும் ஆண்டில் இருள் சூழ்ந்த கடந்த காலத்தை பின்தள்ளி வைத்துவிட்டு ஒரு நாடாக ஒன்றினைந்து சௌபாக்கியத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.

‘பல இலங்கையர்கள் ஏழ்மையால் தவிக்கின்றார்கள். நாம் இந்நிலைக்கு இடங்கொடுக்ககூடாது. எம் நாட்டை அபிவிருத்திச் செய்ய வேண்டும். எம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அதன் மூலம் அவர்கள் வாழ்வதற்கான சூழலொன்றை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

இக்குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்வதற்கு நாம் அனைவரும் கைக்கோர்க்க வேண்டும்’ என்றும் அவர் கூறினார். உலகின் மிகப்பெரிய நத்தார் மரத்தை ஆறாம் நாளாகவும் மக்கள் பார்வைக்காக திறந்து வைத்துஇ நேற்று உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

Related posts

*

*

Top