“கானல்” நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீடு

Barack Obama

அதி வண கலாநிதி. சு.ஜெபநேசனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இலங்கையின் பிரபல நாவலாகிய கே.டானியலின் “கானல்” நாவலின் ஆங்கில வடிவ வெளியீட்டு விழா கடந்த 08.01.2017 ஞாயிற்றுக்கிழமை நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் யாழ். பல்கலைக்கழக ஆங்கில மொழிக் கற்கைத்துறை (ELTC) விரிவுரையாளர் கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் வரவேற்புரையை பேராசிரியர் சி.சிவலிங்கராஜாவும் வெளியீட்டுரையை யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதனும் மதிப்பீட்டுரையை கவிஞர் சோ.பத்மநாதனும் ஆற்றினர்.

நூலின் முதற்பிரதியை சட்டத்தரணி ஷர்மினி விக்னேஸ்வரன் பெற்றுக்கொண்டார். இந்நூலை பிறின்ஸ்ரன் இறையியல் கல்லூரி பேராசிரியர் றிச்சாட் ஃபொக்ஸ் யங் பதிப்பாக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்படங்கள்: ஐ.சிவசாந்தன்

Mirage Book realise (1) Mirage Book realise (2) Mirage Book realise (3) Mirage Book realise (4) Mirage Book realise (5) Mirage Book realise (6) Mirage Book realise (7) Mirage Book realise (8) Mirage Book realise (9) Mirage Book realise (10) Mirage Book realise (11) Mirage Book realise (12) Mirage Book realise (13) Mirage Book realise (14) Mirage Book realise (15) Mirage Book realise (16) Mirage Book realise (17) Mirage Book realise (18)

Related posts

*

*

Top