இளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா

 அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின்   இளஞ் சைவப்புலவர் சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும்  நிகழ்வு எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லை திருஞானசம்பந்நர் ஆதீனத்தில் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத் தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை தலைமையில் இடம்பெறவுள்ளது

ஆசியுரையினை நல்லை திருஞானசம்பந்தர் ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வழங்குவார்.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப்பல்கலைக்கழக இந்துநாகரீகத்துறைத்தலைவர் பேராசிரியர் கலாநிதி ம.வேதநாதன் கலந்துகொண்டு பட்டமளிப்பு பேருரையினை நிகழ்த்தி பட்டங்களினை வழங்கி வைப்பார்

சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணப்பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறை சிரேஸ்ட விரிவுரையாளரும் சைவ சித்தாந்த முதுகலைமாணி கற்க்கை நெறி இணைப்பாளர் கலாநிதி திருமதி சுகந்தினி முரளிதரன் கௌரவ விருந்தினர்களாக ஆகமப் பிரவீணர் சிவஸ்ரீ சோ.இ.பிரணதார்த்தி ஹரக்குருக்கள் சிவஸ்ரீ சி.குமாரராஜக்குருக்கள் சி.கந்தசாமி க..க.க.சிவபாலன் ஆகியோர் கலந்துகொள்ளவு;ளார்கள்.

நிகழ்வில் சைவப்புலவர்கள் 5பேரும் இளஞ்சைவப்புலவர் 23 பேரும் பட்டத்தினைப் பெறவுள்ளார்கள் .அத்துடன் பட்டம் பெறுவோர் விபரங்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் உள்ளடக்கிய சைவநாதம் நூல் வெளியீடும் இடம் பெறும் நூலின் வெளீட்டுரையினை சைவப்புலவர்சங்க உபதலைவர் சு.செல்லத்தரை ஆய்வுரையினை கலாநிதி சுகந்தி முரளிதரன் ஆகியொர் வழங்கவுள்ளார்கள்.

கௌரவப்படடமளிப்பு நிகழ்வில் ஆகமப் பிரவீணர் சிவஸ்ரீ சோ.இ.பிரணதார்த்தி ஹரக்குருக்கள் சிவஸ்ரீ சி.குமாரராஜக்குருக்கள் ஆகியோருக்கு சிவாசசாரிய திலக் பட்டமம் சி.கந்தசாமி க..க.க.சிவபாலன் ஆகியோரு;கு சைவப்புரவலர் பட்டமும் மூத்த சைவப்புலவர் சி.வேலாயுதம் செவப்புலவர் அ.பரசுராமன் சைவப்புலவர் ஆ.கனகரத்தினம் ஆகியோருக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெறும்

கலை நிகழ்வுகளாக செல்வி பானுப்பிரிய தில்லைமணி அவர்களின் நடனம் பன்னாலை கணேசா அறநெறிப்பாடசாலை மாணவர்களின் நாவலர்நீதி நாடகம் ஆகியன இடம்பெறும் .

Related posts

*

*

Top