மஹாகவியின் ‘புதியதொரு வீடு’ நாடகம்

திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கும் மஹாகவியின் புதியதொரு வீடு நாடகம் எதிர்வரும் 05.02.2017 ஞாயிற்றுக்கிழமை  இரண்டு காட்சிகளாக காலை 11.00 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உள்ள திருமறைக் கலாமன்றத்தின், கலைத்தூது கலையக மண்டபத்தில் மேடையேற்றப்படவுள்ளது.

1969 ஆம் ஆண்டு மஹாகவியினால் எழுதப்பட்ட மேற்படி இந்நாடகம் முதன் முதலாக அ. தாசீசியசினால் 1971 ஆம் ஆண்டு கொழும்பில் மேடையேற்றப்பட்டது. அதன்பின் பல தடவைகள் பல நெறியாளர்களினால் தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டு வந்துள்ளது. 1999 ஆம் ஆண்டு கொழும்பு திருமறைக் கலாமன்றத்தினாலும் தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்ட இந்நாடகம் மிக நீண்ட காலத்தின் பின் மீண்டும் யாழ் திருமறைக் கலாமன்றத்தினால் தயாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி கொழும்பிலும் ஒக்ரோபர் மாதம் 02ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் மேடையேற்றப்பட்டு பலரது பாராட்டையும் பெற்றுக்கொண்டது. இந்நாடகம் தற்போது மீண்டும் மேடையேற்றப்படுகின்றது.

மஹாகவியின் கவிதை நாடகமாகிய இந்நாடகம் மீனவக் கிராமமொன்றின் கதை மாந்தரினையும் கடலோடு தொடர்புடையதாக அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வின் சவால்களையும் வெளிப்படுத்துகின்றது. இந்நாடகம் க.பொ.த. சாதாரணதரத்தில் நாடகமும் அரங்கியலும் பயிலும் மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தில்; பாடநூலாக சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

*

*

Top