திருமறைக் கலாமன்றத்தின் நாடகப் பயிலகப் பயிற்சிநெறி

திருமறைக் கலாமன்றத்தின் நாடகப் பயிலகப் பயிற்சிநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. நாடகக் கலையின் மேம்பாடு கருதி செயல்முறை சார்ந்த தேர்ச்சியினை மேம்படுத்தும் நோக்கோடு திருமறைக் கலாமன்றத்தின் நாடகப்பயிலகம் கடந்த 25 வருடங்களாக நடத்தி வருகின்ற நாடக அரங்கியலுக்கான சான்றிதழ் கற்கைநெறியின் 2017ஆம் ஆண்டுக்கான புதிய பிரிவிற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இப்பயிற்சிநெறியில் நாடகக் கலையில் ஆர்வம் உள்ளவர்களும் நாடகமும் அரங்கியலும் பாடத்தினை தரம் 11, 12, 13 இல் பயிலும் ஆர்வமுள்ள மாணவர்களும் இணைந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாதங்களைக் கொண்ட இப் பயிற்சிநெறிக்கான வகுப்புக்கள் சனி, ஞாயிறு தினங்களில் பி.ப 3.30 மணி தொடக்கம் 05.30 மணி வரை நடைபெறுவுள்ளதுடன் போயா தினங்களில் முழுநாள் நாடகப் பட்டறையாகவும் நடைபெறவுள்ளது.

25.02.2017 சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இப்பயிற்சிநெறியில் இணைந்து கொள்ள விரும்புவோர் விண்ணப்பப்படிவங்களை திருமறைக் கலாமன்றத்தின் அலுவலகத்தில் பெற்று பூரணப்படுத்தி 21.02.2017 செவ்வாய்க்கிழமைக்கு முன்பாக மீள ஒப்படைக்குமாறு வேண்டப்படுகின்றார்கள்.

இப் பயிற்சி நெறியில் நாடக எழுத்துருவாக்கம், நடிப்பு, நெறியாள்கை, அரங்கக் துணைக்கலைகள் (வேடஉடை ஒப்பனை, காட்சி விதானிப்பு, இசை ஒளிவிதானிப்பு), நாடகத் தயாரிப்பு, கூத்துப்பயிற்சிகள் போன்றவை பிரதான அம்சங்களாக அமையும்.

Related posts

*

*

Top