நாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம்

திருமறைக் கலாமன்றத்தின் நாடகப் பயிலகத்தின் 20ஆவது புதிய பிரிவின் ஆரம்ப வைபவமும் கடந்த ஆண்டின் பயிற்சியை நிறைவு செய்த 19ஆவது பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று 24.02.2017 வெள்ளிக்கிழமை மாலை 04.00 மணிக்கு இல 286, பிரதான வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது கலையகத்தில் இடம்பெறவுள்ளது.

மன்றத்தின் பிரதி இயக்குநர் யோ.யோண்சன் ராஜ்குமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக நாடகப் பேராசான் குழந்தை ம.சண்முகலிங்கமும் சிறப்பு விருந்தினராக அமல மரித்தியாகிகள் சபையின் வடமாகாண நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் அருட்பணி ஞா.ரமேஸ் அடிகளாரும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

இந்நிகழ்வில் பயிற்சியை நிறைவு செய்யும் மாணவர்களின் கலை நிகழ்வுகளாக ஒயிலாட்டமும் ‘யாரோடு நோகேன்’ நாடகமும் இடம்பெறும். ஆர்முள்ள அனைவரையும் இந்நிகழ்வில் பங்குபற்றிச் சிறப்பிக்குமாறு திருமறைக் கலாமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts

*

*

Top